அலமாரியை திறந்த தாய்…துடிக்க துடிக்க இறந்த 6 வயது மகன்: பதறவைக்கும் வீடியோ..!!

Read Time:2 Minute, 59 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-4சீனாவில் அலமாரியை திறக்கும் போது எதிர்பாராதவிதமாக 6 வயது சிறுவன் மீது விழுந்ததால் சிறுவன் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் Ankang நகரத்தில் தாய் ஒருவர் பொருட்கள் வாங்குவதற்காக அங்குள்ள பல்பொருள் அங்காடிக்கு தனது 6 வயது மகனுடன் சென்றுள்ளார். பொருட்களை வாங்கிய பின்னர், அதன் அருகே இருந்த அலமாரியில் ஏதோ ஒன்றை எடுப்பதற்காக அதன் அறையை திறந்து எடுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அந்த இரும்பு அலமாரி திடீரென சரிந்து கிழே விழத்தொடங்கியது. இதில் சுதாரித்து கொண்ட தாய் அந்த அலமாரி தன் மீது படாதவகையில் விலகிச் செல்வதற்குள், அவருடைய 6 வயது மகன் மீது அந்த இரும்பு அலமாரி பொத்தென்று விழுந்தது. இதில் குறித்த சிறுவன் அதனுள்ளே சிக்கிக்கொண்டான்.

இதை கண்ட அருகில் இருந்தவர்கள் உடனடியாக அந்த அலமாரியை தூக்கிப் பார்க்கையில், சிறுவன் ரத்த வெள்ளத்தில் மயக்கமுற்று கிடப்பதை கண்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக சிறுவனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இரண்டு மணிநேர சிகிச்சைக்கு பின்னர் சிறுவன் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதில் சிறுவனின் தாயாருக்கும் வலது காலில் காயம் ஏற்பட்டதால் அவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து பொலிசார் நடத்திய விசாரணையில், சூப்பர் மார்க்கெட் வரும் நபர்கள் பொருட்களை வாங்க கடைக்குள் செல்வதற்கு முன்னர் அவர்கள் எடுத்துவரும் பொருட்களை குறித்த இரும்பு அலமாரையில் வைத்து பூட்டி விட்டு பின்னர் எடுத்து செல்ல அனுமதிப்பார்கள்.

அது போல் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது என்றும் ஆனால் குறித்த இரும்பு அலமாரியை சரியாக வைக்காத காரணத்தினால் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நெல்லை பெண்ணாக நடித்தது பெருமை: சஞ்சிதாஷெட்டி…!
Next post பிரான்சில் இனி பிறக்கும் குழந்தைகளுக்கு இந்த பெயரை சூட்டுவதற்கு தடை…!!