வாகனம் மோதி 60 அடி தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்ட பெண்: அதிர வைக்கும் சாலை விபத்து…!! வீடியோ

Read Time:3 Minute, 3 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-5தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் பகுதியில் இளம்பெண் ஒருவர் வாகனம் மோதி 60 அடி தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பரபரப்பான ஜோகன்னஸ்பர்க் சாலையில் குறித்த சம்பவம் நடந்துள்ளது அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமெராவில் பதிவாகியுள்ளது.

குறித்த விபத்தின்போது வாகந்த்தில் சிக்கிய அந்த இளம்பெண் ஓட்டுனரின் பார்வையில் படாமல் சுமார் 60 அடி தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது மட்டுமின்றி, தங்களது கோபத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாக மாறியுள்ளது.

ஜோகன்னஸ்பர்க் சாலையில் குறித்த இளம்பெண் சாலையின் ஒருப்பகுதியில் இருந்து மறுபக்கம் செல்வதற்காக சாலையை கடக்கின்றார். அப்போது எதிர்பாராத வகையில் வாகனம் ஒன்று விரைந்து வருகிறது.

குறித்த வாகனம் இவரை மோதித்தள்ளிவிட்டு, அந்த இளம்பெண் வாகனத்தில் சிக்கியதும் அறியாமல் விரைந்து சென்றது. குறித்த பெண்ணின் முகம் மற்றும் தோள் பகுதி தெளிவாக தெரிகின்றது.

இதனிடையே பொதுமக்களின் கூச்சலை அடுத்து வாகனத்தை நிறுத்திய நபர் நடந்த சம்பவத்தை அறிந்து உடனடியாக அந்த பெண்மணியை மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் குறித்த இளம்பெண் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக முழு மருத்துவ அறிக்கை வரும்வரை பொலிஸார் காத்திருப்பதாகவும், அறிக்கை கிடைக்கப்பெற்ற உடன் விசாரணை தொடங்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.

ஆனால் குற்றவியல் பிரிவு மற்றும் சமூக விழிப்புணர்வு அதிகாரிகள் விபத்தை ஏற்படுத்திய குறித்த நபரை தற்போது வலை விரித்து தேடி வருகின்றனர்.

குற்றவாளி கைதாகும் வரை குறித்த வீடியோவை பகிர வேண்டும் என்று அங்குள்ள மக்கள் கோரிக்கை விடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலகத்தையே மறந்து சிரிக்க வைக்கும் காட்சி…!! வீடியோ
Next post கொழுப்பினை உறிஞ்சி எடுத்த நயன்தாரா: இது தான் அழகுக்கு காரணமா?