விமானப்படை குண்டு வீச்சு…

Read Time:5 Minute, 43 Second

Sl.Flight.Erikanai.bmpவிமானப்படை குண்டு வீச்சு மூலம் விடுதலைப்புலிகளின் படகு கட்டும் தளத்தை அழித்து விட்டதாக இலங்கை அரசு கூறி உள்ளது. இலங்கையில் மாவிலாறு அணையை கைப்பற்றுவது தொடர்பாக சிங்கள ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே ஏற்பட்ட போரின் காரணமாக கடந்த 2 வாரங்களில் மட்டும் இரு தரப்பிலும் சுமார் 500 பேர் பலியாகி உள்ளனர். திரிகோணமலை மாவட்டத்தில் ஏற்பட்ட மோதல் பின்னர் இலங்கையின் வடக்கு பகுதிக்கும் பரவியது.

ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள யாழ்ப்பாணம் பகுதியை கைப்பற்றுவதற்காக விடுதலைப்புலிகள் கடுமையான தாக்குதல் நடத்தினார்கள். இதனால் போர் தீவிரம் அடைந்தது.

இந்த நிலையில், இந்த போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக அமெரிக்க ஜனாதிபதி புஷ் தனது சிறப்பு தூதராக அனுப்பி வைத்த தெற்கு மற்றும் மேற்கு ஆசிய விவகாரங்களுக்கான துணை மந்திரி ஸ்டீவன் மேன் கொழும்பு நகரில் இலங்கை அதிபர் ராஜபக்சேயை சந்தித்து பேசினார். அதன்பிறகும் இலங்கையில் சண்டை நீடித்து வருகிறது.

ராணுவம் யாழ்ப்பாணம் பல்கலை கழகத்திற்குள் நுழைந்தது. அங்குள்ள மாணவர் பேரவை அலுவலகத்துக்குள் புகுந்து மாணவர் தலைவர் டி.பகீரதனை கைது செய்தது. அத்துடன் அங்கிருந்த ஆவணங்களையும் கம்ப்ïட்டர்களையும் ராணுவத்தினர் அள்ளிச் சென்றனர்.

யாழ்ப்பாணம் நகரில் நேற்று காலை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைகளுக்கு சென்றனர். ஆனால் விலை மிகவும் அதிகமாக இருந்தது.

வெளிநாட்டினர் தவிப்பு

பலாலி விமானதளம் தொடர்ந்து அங்கு தனியார் விமானங்கள் வருவது நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதால் யாழ்ப்பாணத்தில் உள்ள வெளிநாட்டினர் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவிக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்டவர்கள். அங்குள்ள தங்கள் உறவினர்களை பார்ப்பதற்காக வந்தவர்கள்.

யாழ்ப்பாணத்தை இணைக்கும் பண்ணை கால்வாய் இலங்கை கடற்படையினர் வசம் இருப்பதால் அந்த பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளது.இதனால் மண்டைத்தீவு, ஊர்க்காவல் துறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். தீவுப்பகுதி கிராமங்களில் உள்ள சுமார் 500 குடும்பங்கள் உணவு, மருத்துவ வசதி இன்றி தவிக்கின்றன.

்புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே நடைபெற்று வரும் சண்டையின் காரணமாக நாட்டின் பிற பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் துண்டிக்கப்பட்டு இருப்பதாகவும் விலைவாசி பல மடங்கு உயர்ந்து விட்டதாகவும் அந்த நகரைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார். போரின் காரணமாக அங்கிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என்று கருதி ஏராளமான வாடிக்கையாளர்கள் வங்கிக்கு சென்று தங்கள் கணக்கில் உள்ள பணத்தை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

படகு கட்டும் தளம் அழிப்பு

யாழ்ப்பாணத்தின் தெற்கு பகுதியில் உள்ள தலயாடி என்ற இடத்தில் உள்ள விடுதலைப்புலிகளின் படகு கட்டும் தளத்தை விமானங்கள் மூலம் குண்டு வீசி தகர்த்துவிட்டதாகவும் இதில் சுமார் 40 படகுகள் நாசமானதாகவும் இலங்கை ராணுவ அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் உபாலி ராஜபக்சே தெரிவித்தார். ஆனால் இந்த குண்டு வீச்சில் மீனவர்களின் படகு துறைதான் சேதம் அடைந்தது என்றும் 2 பேர் காயம் அடைந்ததாகவும் விடுதலைப்புலிகள் கூறி உள்ளனர்.

கப்பல்களில் உணவுப்பொருள்

திரிகோணமலை துறைமுகத்தை யொட்டியுள்ள விடுதலைப்புலி கனி நிலைகள் மீது ராணுவத்தினர் நேற்று குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினார்கள்.
யாழ்ப்பாணத்துக்கு தரைவழி போக்குவரத்து துண்டிக்கப்பட்டு இருப்பதால் அங்குள்ளருக்கு திரிகோணமலை துறைமுகத்தில் இருந்து 2 கப்பல்கள் மூலம் உணவுப் பொருட்களை அனுப்பி வைக்க இலங்கை அரசு திட்டமிட்டு உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பாகிஸ்தானில் மழை, சூறாவளிக்கு 15 பேர் சாவு
Next post கிழக்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்