கான்பூர் ரெயில் விபத்து: பலி எண்ணிக்கை 90 ஆக உயர்வு…!!

Read Time:1 Minute, 49 Second

201611201117438280_kanpur-derailment-up-cm-akhilesh-yadav-announces-rs-5-lakh_secvpfகான்பூர் அருகே இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டு, கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ள நிலையில் இந்த கோரவிபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு இழப்பீடாக தலா ஐந்து லட்சம் ரூபாய் வழங்கப்படும் என உத்தரப்பிரதேசம் மாநில முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார்.

மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூரில் இருந்து உத்தரப்பிரதேசம் மாநிலம் வழியாக பீகார் மாநில தலைநகர் பாட்னா நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்த இந்தூர்-ராஜேந்திரா நகர் எக்ஸ்பிரஸ் ரெயில், இன்று அதிகாலை 3.10 மணியளவில் கான்பூர் நகரில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள புக்ரயான் என்ற இடத்தில் தண்டவாளத்தைவிட்டு விலகிச்சென்று, தடம்புரண்டது.

இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ள நிலையில் இந்த கோரவிபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு இழப்பீடாக தலா ஐந்து லட்சம் ரூபாய் வழங்கப்படும் என உத்தரப்பிரதேசம் மாநில முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார். மேலும், காயமைந்தவர்கள் மருத்துவ செலவுக்கு தலா 50 ஆயிரம் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை…!!
Next post குறுகிய காலத்தில் 5 மில்லியனைத் தாண்டிய கீர்த்தி சுரேஷ்…!!