புது அம்மாக்கள் அவசியம் கவனிக்க வேண்டிய 40 விஷயங்கள்..!!

Read Time:11 Minute, 38 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90பிறந்த குழந்தைக்கு இந்த உலகம் புதியது. அது பெறும் அனுபவம் ஒவ்வொன்றும் புதியது. இதேபோல குழந்தையைப் பெற்ற புதுத் தாய்க்கும் குழந்தை வளர்ப்பு என்பதும் புதியஅனுபவமே.

பச்சிளம் குழந்தையை லாகவமாய் கைகளில் எடுக்க அம்மா, அத்தை, பாட்டி, அக்காவிடமிருந்து எளிதாகப் பழகிக்கொண்டாலும், குழந்தையை எப்படிக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதை விளக்குகிறார்,

விருதுநகர் அரசு மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவர் என். அரவிந்த் பாபு.

1. முதலில், இடது கை விரல்களை நன்றாக விரித்து, படுத்திருக்கும் குழந்தையின் தலைக்கும் கழுத்துக்கும் இடையே கையைக்கொடுக்கவும். வலது கையை குழந்தையின் பிருஷ்டத்தில் வைத்து, மெதுவாக உங்கள் பக்கம் ஒருக்களித்து, குழந்தையின் தலை, கழுத்து, கொஞ்சம் முதுகுப் பகுதி எல்லாம் உங்கள் விரிந்த கையில் இருக்கும்படி கெட்டியாகப் பிடித்து, இரு கைகளாலும் பூவை எடுப்பதுபோல தூக்கி, நிதானமாக மார்பில் சாய்த்துக்கொள்ளவும். இப்போது, குழந்தையின் தலை உங்கள் முழங்கைப் பகுதிக்கு வரும்படி மெதுவாக கையில் இறக்கவும். மூன்று மாதங்கள் வரை இப்படியேதான் தூக்கவேண்டும்.

2. சிறுநீர் அடிக்கடி போனால், அதனால், ஆரோக்கியம் கெடாது. குழந்தையின் வளர்ச்சி, சில நேரம் குறைந்தும் சில நேரம் அதிகரித்தும் இருப்பதுபோல தோன்றும். அதனால் பாதிப்பு இல்லை.

3.. 2-லிருந்து 3 மணி நேரத்துக்கு ஒரு முறை டயபரை மாற்ற வேண்டும். டயபரை தொடர்ந்து அணியக் கூடாது. கொஞ்சம் அதிலிருந்து ஃப்ரீ பண்ணி விடலாம்.

4. ஊசி போடும்போது வலிக்காமல் இருக்க, அம்மாவின் மடியில் வைத்துக்கொண்டு போடச் சொல்லலாம் அல்லது வலியை மறக்க, கொஞ்சிப்பேசி கவனத்தைத் திருப்பலாம்.

5. கண்கள் வெவ்வேறு பக்கம் பார்ப்பது போல இருக்கும்; அதற்காக பயப்படக் கூடாது. 4 மாதங்கள் ஆன பிறகு சரியாகிவிடும். சரியாகவில்லை என்றால், மருத்துவரிடம் காட்டவும்.

6.. அலர்ஜி ஏற்படுத்தும் பொருள்களைத் தவிர்க்க வேண்டும். சாம்பிராணிப் புகை, இலவம் பஞ்சு, தூசு, நாய், பூனை வளர்ப்பு ஆகியவற்றைத் தவிர்த்தல் நல்லது. புது அம்மா

7. குழந்தைகள் சாப்பிட ஆரம்பிக்கும்போது, சாப்பிட்ட பின் பற்களைத் துணியால் துடைக்கவும். வளர்ந்த பின் , ஃப்ளோரைடு இல்லாத பற்பசையை உபயோகிக்கவும்.

8. விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தை சிரிக்காமலிருந்தாலும், திடீரெனச் சோர்வு அடைந்தாலும், அதற்குத் தூக்கம் வந்துவிட்டது என்று அர்த்தம்.

9. குழந்தை, ஒரு நாளைக்கு 18-லிருந்து 20 மணி நேரம் தூங்கும். வளர வளர நேரம் குறையும். தூங்கும் குழந்தையை இடையே எழுப்ப வேண்டாம்.

10. இரவில் தூங்கவேண்டும் என்ற பழக்கத்தை உருவாக்குவது நல்லது. தூங்கவைக்கும்போது, தாலாட்டுப் பாடி தூங்கவைக்கவும். தூங்கும்போது, வெளிச்சத்தை ‘டிம்’ பண்ணி வைக்கவும். வெயில் காலத்தில் வியர்க்காமலும், குளிர் காலத்தில், ஏற்ற கதகதப்பையும் அமைத்துக் கொடுக்கவும். இரைச்சல், டி.வி சத்தம் இல்லாமல் இருந்தால் குழந்தை நன்றாகத் தூங்கும்.

11. தோளிலோ, மடியிலோ தூங்கும் குழந்தையைத் தூக்கி, வேறிடத்தில் படுக்கவைக்கும்போது விழித்துக்கொள்ளும். பிறகு, சுமார் 15 நிமிடங்களுக்குள் மறுபடியும் தூங்கிவிடும்.

12. பாலைச் சூடுபடுத்தி, ஆரவைத்து, குடிக்கும் சூட்டில் கொடுக்கவும். சுடவைத்த பாலை இரண்டு மணி நேரத்துக்குள் பயன்படுத்தவும்.

13. விளையாட வாங்கிக்கொடுக்கும் பொம்மையில் ஸ்பிரிங், பட்டன், பேட்டரி, சக்கரம் இருந்தால், குழந்தைகளிடம் கொடுக்கக் கூடாது.

14. மூன்றிலிருந்து ஐந்து மாதத்தில் கையில் இருப்பதைப் பிடுங்கும். காபி, டீ மற்றும் உணவுப் பொருட்களைச் சற்று தூரத்திலேயே வைத்து, ஸ்பூனால் ஊட்டவும்.

15. குழந்தை சற்று வளர்ந்ததும், யாரும் அருகில் இல்லாதபோது சேர், டேபிள் போன்ற பொருட்கள் பக்கத்தில் இல்லாதபடி பார்த்துக்கொள்ளவும். அதைப் பிடித்து இழுக்க நேர்ந்தால், அது மேலே விழுந்துவிடக்கூடும்.

16. குழந்தை, 4முதல்6 மாதத்துக்குள் திரும்பியும், புறண்டும் படுக்க ஆரம்பிக்கும். திரும்பும்போது கை, தலை புறண்டுகொள்ளும். அப்போது, கவனமாக இருந்து, சரிபண்ணிப் படுக்கவைக்கவும்.

17. நீங்கள் ஷோஃபா அல்லது பெட்டில் உட்கார்ந்திருக்கும்போது, குழந்தை மேலே எம்பி, கை, கால்களை ஆட்டி, ரசித்துக் குதிக்கலாம் கவனமாக இருக்கவும்.

18. குழந்தை அம்மாவின் முகத்தைப் பார்த்து புன்னகைக்கும்போது, குழந்தையின் முகத்தைப் பார்த்து, அதன் எதிர்பார்ப்புக்கு ஏற்ப பேசிக்கொண்டிருக்க வேண்டும். உங்கள் பார்வை குழந்தை மீது நேராக இருக்க வேண்டும்.

19. குழந்தையிடம் பேசும்போது தெளிவாகப் பேசவேண்டும். கொஞ்சம் ஆக்‌ஷனோடு பேசினால், குழந்தை அதை ரசித்து உள்வாங்கும். புது அம்மா

20. இது அப்பா, இது அம்மா, இது தாத்தா என உறவுகளை அறிமுகப்படுத்தத் தவறாதீர்கள்.

21. குழந்தையை சுத்தமாக வைத்துக்கொள்ளவும். அதற்காக கழுவிக்கொண்டே இருக்க வேண்டாம். குழந்தை இருக்கும் இடம், அணியும் உடை சுத்தமாக இருக்கவேண்டும். ஒரு தடவை நன்றாக குளிப்பாட்டினால் போதும். அதற்குமேல், துணியை நனைத்து துடைத்துவிடவும்.

22. இரண்டு மாதம் வரை எங்கேயும் வெளியே தூக்கிக்கொண்டு போகக் கூடாது.

23. கை, கால்களை அசைக்க உதவும் சின்னச் சின்ன பொம்மைகள், கிளுகிளுப்பையைக் கொடுக்கவும்.

24. கண்ணில் பீழை இருந்தால், பஞ்சை சிறிதாக உருட்டி, அதனால் கண்களைத் துடைக்கவும், ஒரு கண்ணுக்கு ஒரு பஞ்சை மட்டும் பயன்படுத்தவும்.

25. மூக்கை சுத்தம் பண்ண, அதற்கென உள்ள உறிஞ்சி கொண்டு சுத்தம் பண்ணலாம் அல்லது மெல்லிய துணித் திரியால் சுத்தம் பண்ணலாம்.

26. காதுக்குள் எதையும் நுழைக்காதீர்கள். வெதுவெதுப்பான நீரில் மெல்லிய துணியை நனைத்து வெளிப்புறம் துடைக்கவும்.

27. தண்ணீர் உள்ள தொட்டியில், தொட்டியின் அருகில் குழந்தையை விடக் கூடாது.

28. வெதுவெதுப்பான நீரில்தான் குளிப்பாட்ட வேண்டும்.

29. நகத்தை நெயில் கட்டரால் கட் பண்ணக் கூடாது. ஒரு மாதத்துக்குப் பிறகு மெதுவாகக் கொஞ்சம் உறித்துவிடலாம்.

30. ஒரு நாள் விட்டு ஒரு நாள் எண்ணெய் தடவி, மெதுமாக மசாஜ் செய்து குளிபாட்டுவது நல்லது. அழுத்தித் தேய்க்கக் கூடாது.

31. சாஃப்ட் காட்டன் உடைகள்தான் போட வேண்டும்.

32. பட்டன், தடித்த கயறு, பார்டர் உள்ள சட்டைகள், உடம்பில் வலி ஏற்படுத்தாத வகையிலும், முன்னும் பின்னும் திறந்த சட்டைகளையும் அணியவும்.

33. நடக்கும் வயதில் ஷூ அணிந்தால் போதும். அதற்கு முன் என்றால், காலுக்கு இதமாக வாங்கவும். எதுவும் போடாமல் வெறும் காலோடு இருக்கலாம்.

34. தலைவழியாகக் கழற்றும் சட்டைகளை அணியக் கூடாது.

35. குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய், நல்ல சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும். சாப்பிடும்போது கவலைப்படக் கூடாது.

36. குழந்தை தூங்கும்போது திடுக்கிட்டு எழுமாறு இடையூறு செய்யக்கூடாது.புது அம்மா

37. சுத்தம் இல்லாத கைகளால் குழந்தையைத் தூக்கக்கூடாது.

38. திடீரென அதிக வெளிச்சம் முகத்தில் விழும்படி செய்யக் கூடாது.

39. குழந்தையாக இருக்கும்போது, அதிக வெளிச்சம் பயன்படுத்தி அடிக்கடி போட்டோ, வீடியோக்கள் எடுப்பதைத் தவிர்க்கவும். அதனால், கண் பாதிப்பு ஏற்படக் கூடும்.

40. எப்போதும் குழந்தையுடன் சிரித்துப் பேசிக்கொண்டே இருக்க வேண்டும்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மகளிர் பக்கம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உங்க வீட்ல ஏதாவது விஷேசம்னா சொல்லியனுப்புங்க: கண்டிப்பா இவரோட உதவி தேவைப்படும்…!! வீடியோ
Next post பிரித்தானியாவில் ஐபோன் வெடித்தமையினால் சிறுமிக்கு ஏற்பட்ட அவலம்…!!