By 21 November 2016 0 Comments

மிளகுதூளுடன் கொஞ்சம் மஞ்சள் சேர்த்து குடியுங்கள்: கிடைக்கும் நன்மைகள் பாருங்கள்…!!

625-500-560-350-160-300-053-800-748-160-70-5மிளகுத்தூள், செரிமானம், தும்மல், சளி, கபம், பொடுகு, பல்வலி என உடல் முழுவதிலும் ஏற்படும் பலவகையான உடல்நல பிரச்சனைக்கு தீர்வளிக்கக் கூடியது.

வயிறு நிறைய உணவு உண்ட பிறகு செரிமானம் ஆக கொஞ்சம் சிக்கல் ஏற்படும். அந்த வேளையில் மிளகுத்தூளை மோரில் கலந்து குடித்து வந்தால் செரிமானத்தை சீராக்கும்.

மழைக் காலத்தில் தும்மல், சளி பிரச்சனை அதிகரிக்கும் போது கொஞ்சம் மஞ்சள்தூளுடன் மிளகுத்தூளை சேர்த்து பாலில் சேர்த்து கொதிக்க வைத்து குடித்து வந்தால் இரண்டே நாளில் தும்மல், சளி பிரச்சனை சரியாகும்.

தொண்டைக் கட்டு, பல் வலி போன்றப் பிரச்சனை அதிகமாக இருந்தால், மிளகுத்தூளை நீரில் இட்டுக் கொதிக்க வைத்து, ஆறிய பிறகு வாய்க் கொப்பளித்து வந்தால் நல்ல தீர்வுக் காண முடியும்.

ஈரல் நோய் எனப்படும் வைரல் ஹெப்பாடிடிஸ் பிரச்சனை இருப்பவர்கள் மிளகு, சுக்கு, திப்பிலி மூன்றையும் சம அளவு சேர்த்து வறுத்துப் பொடி செய்து கொண்டு, காலை, மாலை என இருவேளை சிறிதளவு சாப்பிட்டு வந்தால் ஈரல் நோய் குணமாகும்.

பொடுகு மற்றும் தலைமுடி உதிர்வு பிரச்சனை உள்ளவர்கள் மிளகைப் பாலில் சேர்த்து அரைத்து தலைக்கு தடவி, ஊறவைத்து சிறிது நேரம் களைத்து குளித்து வந்தால் பொடுகு பிரச்சனை தீரும் மற்றும் தலை முடி நன்கு வளரும்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… http://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D



Post a Comment

Protected by WP Anti Spam