வீட்டில் தனியாக இருக்கும் பெண்களா? எச்சரிக்கை…!!

Read Time:4 Minute, 27 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-1வீட்டில் தனியாக வசிக்கும் பெண்களை குறிவைத்துதான் மர்மநபர்கள் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

வீட்டில் தனியாக வசிக்கும் பெண்களை குறிவைக்கும் கும்பல், தாங்கள் செய்யப்போகும் செயலுக்கு பல நாட்கள் திட்டமிட்டு அதன்பின்னரே, தங்கள் ஆப்ரேஷனை தொடங்குகின்றனர்.

எனவே, வெளி ஆட்கள் யாரும் உங்கள் வீட்டிற்கு அருகில் உலாவில் அதனை கவனத்தில் எடுத்துகொள்ளுங்கள்.

வீட்டில் தனியாக இருக்கும் பெண்களுக்கு இதோ பாதுகாப்பு வழிகள்

வீட்டின் காலிங் பெல்லை யார் வந்து அடித்தாலும், உடனே சென்று கதவினை திறந்துவிடாதீர்கள்.
வீட்டிற்கு வந்துள்ள நபர் யார் என்பதை கதவில் பொருத்தப்பட்டுள்ள Eye Hole வழியே பார்த்துவிட்டு, வந்திருக்கும் நபர் பழக்கப்பட்ட நபர்தான் என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு சற்றும் அறிமுகமில்லாத நபர்கள் வீட்டுக்கு வந்தால், அவர்களை ஒருபோதும் உள்ளே அனுமதிக்காதீர்கள். மாறாக வாசலிலேயே வைத்து வந்ததிற்கான காரணத்தை கேட்டு அறிந்துகொள்ளுங்கள்.

எலக்ட்ரீஷியன் மற்றும் பிளம்பர் வேலை போன்ற வீட்டுக்குள் செய்யவேண்டிய வேலைகளுக்கு, சம்மந்தபட்ட வேலையாள் மீது எவ்வித சந்தேகமும் இல்லாத பட்சத்தில் அவரை வீட்டுக்குள் அனுமதிக்கலாம்.

சில வீடுகளில் கேட் போட்டிருப்பார்கள். தேவையான நேரம் தவிர மற்ற நேரங்களில் இந்த கேட்டினை பூட்டி வைத்துவிடுங்கள்.

அருகில் வீடுகள் இல்லாமல், நகரின் வெளிப்புறங்களில் வசிப்பவர்கள் இருட்டிய நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். மேலும், ஒதுக்குப்புறமான வீடுகளில் வசிப்பவர்கள் கண்டிப்பான முறையில் Emergency Alarm பொருத்திக்கொள்வது நல்லது.

வீட்டை சுற்றிலும் செடி கொடிகளை வளர்த்திருந்தால், திருடர்கள் அதன்பின்புறம் பதுங்கியிருக்கவும் வாய்ப்பிருக்கிறது. எனவே, கமெராவினை பொருத்தி யாரேனும் பதுங்கியிருக்கிறார்களா என பார்ப்பது நல்லது.

வீட்டின் பவர் பாக்ஸை எப்போதும் பூட்டியே வைத்திருங்கள்.

வீட்டு உள்வேலைகளுக்கு பெண் வேலையாட்களையும், வீட்டின் வெளி வேலைகளுக்கு ஆண் வேலையாட்களையும் நியமித்துக்கொள்வது சிறந்தது.

குடும்பத்தினருடன் எங்கேயாவது வெளியில் சென்றால், வீட்டினை பூட்டிவிட்டு செல்வதை விட நம்பிக்கைக்கு உரியவர்கள் யாரேனும் இருந்தால் அவர்களை வீட்டில் விட்டுச்செல்வது நல்லது. ஏனெனில் அதிக அளவில் பூட்டிய வீட்டிற்குள் தான் அதிக கொள்ளை சம்பவங்கள் நடைபெறுகின்றன.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மகளிர் பக்கம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 40 நாட்கள் கற்கண்டு சாப்பிட்டால் என்ன நன்மை கிடைக்கும்?
Next post இலங்கையின் வான்பரப்பில் தோன்றும் உலகின் அதிசயம்…!!