40 நாட்கள் கற்கண்டு சாப்பிட்டால் என்ன நன்மை கிடைக்கும்?

Read Time:3 Minute, 57 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-2பொதுவாக நம் உடலை பல்வேறு விதமான நோய்கள் தாக்குகின்றன.

எனவே நமக்கு உடல்நிலை சரியில்லை என்றால் உடனே மருத்துவரை சென்று பார்த்து சிகிச்சையை பெற்றுக் கொள்கின்றோம்.

இதனால் நமக்கு உடல்நிலை சரியாகுமே தவிர உடலின் நீண்ட கால ஆரோக்கியத்தை நம்மால் பெற முடிவதில்லை.

நமக்கு உடலில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால், நமது வீட்டில் உள்ள உணவுப் பொருட்கள் மூலமே அதை சரிசெய்துக் கொள்ளலாம். இதோ அதற்கான சூப்பர் வழி.

மெலிந்த உடல் உள்ளவர்கள், கற்கண்டை வெண்ணெயுடன் சேர்த்து நாற்பது நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மெலிந்த உடல் பருமனாகும்.

சளித் தொல்லையினால், தொண்டை கட்டிக்கொண்டு குரல் வராமல், கஷ்டப்படுபவர்கள் கற்பூர வல்லியின் சாறு எடுத்து, அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்துப் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

வயிற்றின் சுற்றளவு அதிகமாக இருப்பவர்கள், வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி, அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை என்று இரண்டு வேளைகளும் ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர வேண்டும்.

கடுமையான மூட்டுவலிகள் மூலம் கஷ்டப்படுபவர்கள், சுக்கை நீர் விட்டு அரைத்து கொதிக்கவைத்து மூட்டுகளில் தடவினால், மூட்டுவலி விரைவில் குறைந்து விடும்.
மூலம் பிரச்சனைகள் இருப்பவர்கள், கருணைக் கிழங்கை தொடர்ந்து வாரம் இரண்டு முறை உணவுடன் சேர்த்து சாப்பிட வேண்டும்.

ஒரு டம்ளர் கொதிநீரில், 1 டேபிள் ஸ்பூன் தேனைக் கலந்து குடித்தால் 1/4 மணி நேரத்தில் வயிற்று வலி காணாமல் போய்விடும்.

நன்றாக காய்ச்சிய பசும்பாலில் மஞ்சள், மிளகுப் பொடி பனங்கற்கண்டுஆகியவற்றை சேர்த்து இரவில் குடித்து வந்தால், வரட்டு இருமல் குணமாகும்.

அடிக்கடி ஏப்பம் விடும் பிரச்சனைகள் இருந்தால், வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து சாப்பிட்டால் குணமாகும்.

ஞாபக மறதி அதிகமாக இருப்பவர்கள், வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடி செய்து, தினமும் ஒரு தேக்கரண்டி அளவு அந்தப் பொடியை சாப்பிட்டு வந்தால், நினைவாற்றல் அதிகரிக்கும்.

பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் ஏற்பட்டால், உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து, பின் அதை காலையில் குடித்து வர வேண்டும். இதனால் மாதவிடாய்க் கோளாறுகள் மட்டுமின்றி இதய நோயும் குணமாகிவிடும்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… https://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வேகமாக உண்ணும் போட்டி: அரிசி உருண்டை சாப்பிட்ட ஜப்பான் இளைஞருக்கு நேர்ந்த கதி…!!
Next post வீட்டில் தனியாக இருக்கும் பெண்களா? எச்சரிக்கை…!!