மரணத்தோடு போராடும் சிறுமி: தந்தை வெளியிட்ட உருக்கமான வீடியோ பதிவு…!!

Read Time:3 Minute, 45 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-3பிரான்சில் கோமாவில் இருந்த சிறுமியின் சிகிச்சையை நிறுத்த மருத்துவர்கள் திட்டமிட்டிருந்த நிலையில் சிறுமி கண்விழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்சில் தொற்று நோய் தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார் Merseille பகுதியில் குடியிருந்துவரும் சிறுமி.

நோய் தாக்குதல் தீவிரமடைந்ததால் குறித்த சிறுமி கடந்த செப்டம்பர் 25-ஆம் திகதியில் இருந்து கோமா நிலைக்கு தள்ளப்பட்டார்.

இருப்பினும் நம்பிக்கை தளராத மருத்துவர்கள் சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளித்து தங்களால் இயன்றவரை கடுமையாக போராடி வந்தனர்.

இதனிடையே கடந்த 10 நாட்களாக எவ்வித முன்னேற்றமும் சிறுமியிடம் இருந்து காணாததை அடுத்து குறித்த சிறுமிக்கு வழங்கப்பட்டு வந்த தீவிர சிகிச்சைகளை கட்டுப்படுத்த மருத்துவர்கள் சிறுமியின் பெற்றோரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஆனால் மருத்துவர்களின் இந்த முடிவை ஏற்றுக் கொள்ளாத பெற்றோர் தங்களின் குழந்தையின் உயிரை காக்கும் பொருட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவில் குறித்த குழந்தைக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் தொடர வேண்டும் எனவும், தேவகைக்கு ஏற்ற மருத்துவ நிபுணர்களையும் வரவழைத்துக்கொள்ள உத்தரவிட்டது.

இதனிடையே சிறுமியின் தந்தையின் நண்பர் ஒருவர் நிதி திரட்டும் நோக்கில் சிறப்பு ஏற்பாடு ஒன்றையும் மேற்கொண்டார். குறித்த நிதியில் சட்டசிக்கல்களுக்காகவும் அவரது எஞ்சிய மருத்துவ செலவினங்களுக்காகவும் செலவிட முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் சிறுமி மார்வா செவ்வாய் இரவு கண்விழித்து பார்த்துள்ளார். பெற்றோர் மற்றும் உறவினர்கள், நண்பர்களின் வேண்டுதலுக்கு கிடைத்த பலனாக இதை பார்க்கப்படுகிறது.

மரணத்தை வென்ற சிறுமியின் வீடியோ ஒன்றை பதிவேற்றியுள்ள அவரது தந்தை, சிறுமியின் தற்போதுள்ள நிலையை விளக்கியுள்ளார்.

தொற்று நோய் இதயத்தில் கடுமையாக தாக்கியதால் கோமாவில் விழுந்துள்ளார். நீண்ட போராட்டத்திற்கு பின்னர் தற்போது அவரது இருதயம் துடிக்கிறது. ஆனால் வருந்தத்தக்க தகவல் என்னவென்றால் குறித்த நோய் தொற்று தற்போது மூளையில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அதனால் மேலும் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக அந்த தந்தை தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 26 வயதில் 100 அறுவைசிகிச்சை செய்துகொண்ட அதிசய பெண்: வியக்க வைக்கும் காரணம்..!!
Next post நீங்களே உங்கள் வீட்டில் தயாரிக்கலாம் கற்றாழை சோப்…!!