நூறாவது பிறந்த நாளை கொண்டாடிய இரட்டை சகோதரிகள்: பிறந்தநாள் விழாவில் நடந்த சுவாரஸ்யம்…!!

Read Time:3 Minute, 40 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-1பிரித்தானியாவில் இரட்டை சகோதரிகள் தங்களுடைய நூறாவது பிறந்தநாளை சக நண்பர்களுடன் கொண்டாடிய சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் Worcestershire நகரத்தின் Stourport என்ற பகுதியில் வசித்து வருபவர்கள் தான் Irene Crump மற்றும் Phyllis Jones. இவர்கள் கடந்த ஞாயிறு அன்று தங்களுடைய நூறாவது பிறந்த நாளை தங்களுடைய குடும்பத்தார் மற்றும் சக நண்பர்களுடன் மிகவும் விஷேசமாக கொண்டாடியுள்ளனர்.

Irene Crump மற்றும் Phyllis Jones கடந்த 1916 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் திகதி பிறந்துள்ளனர். இதில் Phyllis Jones 25 நிமிடங்களுக்கு இடைவெளியில் பிறந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து Irene Crump கூறுகையில், இன்றைய நாள் தங்களுக்கு மிகவும் சிறந்த நாள் என்றும் இன்றைய நாள் தங்களுடைய வாழ்நாளில் மறக்க முடியாது என்று கூறியுள்ளார்.

இதற்கு முன்னர் 90 வது பிறந்த நாளை மிகவும் சிறப்பாக கொண்டாடியதாகவும், அதன் பின்னர் கடந்த ஆண்டு 99 வது பிறந்தநாளை கொண்டாடியதாகவும், தற்போது சதத்தில் வந்து நிற்பதாகவும் கூறியுள்ளார். இதை எட்டியதற்கு தங்களுடைய முறையான உணவுப் பழக்கவழக்கங்களே காரணம் என்று கூறியுள்ளார்.

நாங்கள் இருவரும் எப்போதும் நெருக்கமாக இருப்போம் என்றும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் Jones தன்னை விட்டு சென்றுவிட்டதாகவும், அதன் பின்னர் உடல் நிலை சரியில்லை என்றவுடன் தன் அருகிலே இருந்து தன்னை கவனித்துக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.

அன்று மட்டும் அவள் தன்னை கவனிக்காமல் இருந்திருந்தால் இன்று இது சாத்தியமில்லை என்றும் கூறியுள்ளார். அதே போன்று இவர்கள் இருவருக்கும் ஒரே நேர்த்தில் தான் வேலை கிடைத்ததும் என்றும் அதுவும் ஒரே நிறுவனம் என்பது தான் அதில் சிறப்பு என கூறியுள்ளார்.

இருவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளது. அதில் Irene கணவரின் பெயர் Samuel எனவும் இவர் கடந்த 1999 ஆம் ஆண்டு தன்னுடைய 90 வயதில் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதே போன்று Phyllis Jones கணவரின் பெயர் Ray Jones எனவும் இவர் தன்னுடைய 91 வயதில் கடந்த 2006 ஆம் ஆண்டும் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.

மேலும் தனக்கு பரிசுப் பொருட்கள் எதுவும் வேண்டாம் என்றும் அதற்கு பதிலாக சிறப்பு ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கிக் கொடுத்தால் அனைவருக்கும் மிகவும் உதவியாக இருக்கும் என்றும் இதை தான் பரிசுப் பொருட்களாக கேட்கவில்லை ஒரு நன்கொடையாக கேட்பதாக கூறியுள்ளனர். பிரித்தானியாவில் 6 ஜோடிகள் மட்டுமே இரட்டை சகோதரர்கள் மற்றும் சகோதரிகளாக இருப்பதாக கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தூங்கும் குழந்தைக்கு வித்தியாசமாக ஆடை அணிவித்து அழகு பார்த்த தாயார்…!!
Next post இரவில் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள்…!!