வெறும் இரண்டே நிமிடத்தில் முகத்தில் உடனடி பொலிவு! அருமையான குறிப்பு…!!

Read Time:2 Minute, 57 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-2முகம் எல்லா சமயங்களிலும் புத்துணர்வுடன் இருக்காது. சில சமயங்களில் மிகவும் களைப்பாக இருக்கும். பொலிவின்றி ஏதோ ஒன்று மிஸ்ஸிங் என்று சொல்ல தோன்றும்.

அதுவும் விசேஷங்களுக்கு செல்லும்போதுதான் முகம் சோர்வாக தெரியும். அலைச்சல் சரியான தூக்கம் இல்லாதது என பல காரணங்கள் இருக்கலாம். அந்த மாதிரியான சமயங்களில் கைகொடுக்கும் ஒரு விசேட குறிப்பு.

செய்வதற்கு சில நிமிடங்களே ஆகும். ஒரு முறை செய்து ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டால் போதும். வேண்டும் பொழுதினில் இதனை உபயோகித்தால் உடனடியாக புத்துணர்வு தரும்.

தேவையானவை:

ரோஸ் வாட்டர் – அரை கப்
கற்றாழை சதைப்பற்று – 1 டீ ஸ்பூன்
விட்ச் ஹாஜல் (witch hazel) – 1 டீ ஸ்பூன்
வெள்ளரிக்காய் சாறு – 2 டேபிள் ஸ்பூன்
லாவெண்டர் எண்ணெய் – 1 டீ ஸ்பூன்

செய்முறை:

வெள்ளரிக்காயை சாறு எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் மற்ற எல்லா பொருட்களையும் கொடுக்கப்பட்ட அளவில் கலந்து ஒரு சுத்தமான பாட்டில் அல்லது ஸ்ப்ரே பாட்டிலில் எடுத்துக் கொள்ளுங்கள். நன்றாக குலுக்க வேண்டும்.

பின்னர் அதனை 1 மணி நேரத்திற்கு ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள். மேக்கப்பை அகற்றியவுடன் ராசயனங்கள் சருமத்தில் தங்கியிருக்கும். அந்த மாதிரியான சமயங்களில் இதனை முகத்தில் ஸ்ப்ரே செய்து கொள்ளுங்கள் அல்லது மிகவும் சோர்ந்துள்ள சமயங்களில், முகம் வறண்ட போது, அல்லது பொலிவின்றி இருக்கும்போது இந்த கலவையை முகத்தில் தடவி விட்டால் உடனடி புத்துணர்ச்சி, பொலிவு கிடைக்கும். முயன்று பாருங்கள்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மகளிர் பக்கம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறந்து வெளியில் குதித்த பெண்: பயணிகள் அதிர்ச்சி…!!
Next post நக்ரோடா ராணுவ மெஸ்சில் துப்பாக்கி சூடு: 2 அதிகாரிகள், 5 ராணுவ வீரர்கள் பலி…!!