குண்டு வெடிப்பு வழக்குகளில் தொடர்பு சென்னை என்ஜினீயர் உள்பட 3 பேர் கைது…!!

Read Time:4 Minute, 2 Second

201611290727476195_chennai-engineer-including-3-arrested-involved-in-bomb-blast_secvpfஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 7-ந்தேதி குண்டு வெடித்தது.

இதேபோல் கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு வளாகத்தில் ஜூன் மாதம் 15-ந்தேதியும், கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள கோர்ட்டு வளாகத்தில் ஆகஸ்டு மாதம் 1-ந்தேதியும், ஆந்திர மாநிலம் நெல்லூரில் செப்டம்பர் மாதம் 12-ந்தேதியும், பின்னர் கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள ஜூடிசியல் கோர்ட்டு வளாகத்தில் உள்ள கழிவறையில் கடந்த 1-ந்தேதியும் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன.

நெல்லூர் மற்றும் மலப்புரம் கோர்ட்டு வளாகத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களின் போது அங்கு சில துண்டு பிரசுரங்களும், பென் டிரைவ்களும் கண்டெடுக்கப்பட்டன.

மேற்கண்ட இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநிலங்களின் போலீசார் உதவியுடன் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் மேற்கண்ட குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக 3 பேரை அவர்கள் கைது செய்து உள்ளனர்.

கைதானவர்கள் பெயர் விவரம் வருமாறு:-

1. சுலைமான் (வயது 23). மதுரையைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயரான இவர், சென்னை பாலவாக்கத்தில் ஒரு வீட்டில் தங்கி இருந்து தரமணியில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார்.

2. அப்பாஸ் அலி (27). மதுரை இஸ்மாயில்புரம் முனிசாலை ரோட்டைச் சேர்ந்த இவர் 8-ம் வகுப்பு வரை படித்து உள்ளார். பெயிண்டராக பணியாற்றி வந்தார்.

3. சம்சும் கரிம் ராஜா. பி.காம். பட்டதாரியான இவர் மதுரை கே.புதூர் விஸ்வநாத நகரைச் சேர்ந்தவர். மதுரையில் கறிக்கோழி கடை நடத்தி வந்தார்.

மேலும் மதுரை ஐலண்டு நகரைச் சேர்ந்த முகமது அயூப் அலி (25) என்பவரை பிடித்து விசாரித்து வருகிறார்கள். இவர் காதுகேட்கும் கருவி தயாரிப்பு நிறுவனத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வருபவர் ஆவார்.

இந்த குழுவுக்கு சுலைமான்தான் தலைவர் போல் செயல்பட்டு உள்ளார்.

இவர்களிடம் இருந்து செல்போன்கள், ஹார்டு டிஸ்குகள் ஆகியவற்றை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.

கைது செய்யப்பட்ட 3 பேரும் கோர்ட்டுகளில் ஆஜர்படுத்தப்பட்டு, மைசூருவில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக பெங்களூரு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள தேசிய புலனாய்வு முகமை தனிக்கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள்.

மேற்கண்ட தகவல்களை தேசிய புலனாய்வு முகமை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கைதான மூவரும் அல்கொய்தா இயக்க ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இதை பார்த்திட்டு சிரிக்காம இருந்தா உடனே டாக்டரை பாருங்க…!! வீடியோ
Next post உங்களுக்கு இந்த மாதிரி இருக்கா? கொழுப்பு கட்டிகளை அலட்சியப்படுத்த வேண்டாம்…!!