வடபழனியில் கள்ளக்காதலனை ஏவி கணவரை கொன்ற மனைவி கைது…!!

Read Time:5 Minute, 52 Second

201611301225243317_paramour-issue-husband-murder-wife-arrest-in-vadapalani_secvpfவடபழனி பக்தவச்சலம் காலனி 2-வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 35). அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இவரது மனைவி பாரதி (28). மயிலாப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 1 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

நேற்று இரவு கணவன் – மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு தூங்கினர். அதிகாலை 3 மணி அளவில் வீட்டின் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது.

கோபாலகிருஷ்ணன் கதவை திறந்த போது எதிரில் கத்தியுடன் வாலிபர் நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அந்த வாலிபர் திடீரென கோபாலகிருஷ்ணனை தாக்கி வீட்டுக்குள் இழுத்து சென்றார். பின்னர் அவரது கழுத்தை கத்தியால் அறுத்தார்.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த கோபாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து வீட்டில் இருந்த பாரதி மீது மயக்க ஸ்பிரே அடித்தார். இதில் அவர் மயங்கினார். பின்னர் அவரது கை, காலை கயிற்றால் கட்டிப்போட்டு அணிந்திருந்த நகை மற்றும் வீட்டில் இருந்த பணத்தை கொள்ளையடித்து மர்ம வாலிபர் தப்பிச் சென்றுவிட்டார்.

அதிகாலை நேரம் என்பதாலும், அலறல் சத்தம் பக்கத்து வீட்டில் இருந்தவர்களுக்கு கேட்கவில்லை என்பதாலும் கொலை நடந்தது அக்கம் பக்கத்தினருக்கு உடனடியாக தெரியவில்லை.

இதற்கிடையே வடபழனி பகுதியில் ஏட்டு சங்கர், போலீஸ் டிரைவர் சமுத்திர வேல் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கையில் பையுடன் பதட்டத்துடன் வாலிபர் ஓடியதை கண்டு சந்தேகம் அடைந்தனர். அவரை விரட்டிப் பிடித்து பையை சோதனை செய்த போது ரத்தக்கறை படிந்த சிறிய கத்தி, செல்போன், நகை-பணம் இருப்பது தெரிந்தது.

விசாரணையில் அவர் காட்பாடியை சேர்ந்த ரவீரந்திரன் (25) என்பது தெரிந்தது. கள்ளக்காதல் தகராறில் காதலியின் கணவரை கொன்று தப்பி வந்ததாக தெரிவித்தார்.

அதிர்ச்சி அடைந்த போலீசார் ரவீந்திரனை கைது செய்து கொலை நடந்த வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

அங்கு கோபாலகிருஷ்ணன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அருகில் மயக்க நிலையில் பாரதி கை, கால் கட்டப்பட்டு இருந்தார். அவரை மீட்டு முதல் உதவி சிகிச்சை அளித்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் காதலனை ஏவி கணவரை தீர்த்துக் கட்டியதை பாரதி ஒப்புக்கொண்டார். போலீஸ் விசாரணையை திசை திருப்ப கொள்ளை நாடகம் ஆடியது தெரிந்தது.

இதையடுத்து பாரதி, அவரது கள்ளக்காதலன் ரவீந்திரன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அப்போது ரவீந்திரன் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

நானும், பாரதியும் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்த போது பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது கள்ளக்காதலாக மாறியது.

எங்களது கள்ளக்காதல் விவகாரம் தெரிந்ததால் கோபாலகிருஷ்ணன், மனைவி பாரதியை கண்டித்தார்.

எனவே கோபாலகிருஷ்ணனை தீர்த்துக்கட்டி விட்டு வாழ்க்கையில் சந்தோ‌ஷமாக இருக்கலாம் என்று முடிவு செய்தோம். போலீசில் சிக்காமல் இருக்க கொள்ளை நாடகம் ஆடினால் தப்பலாம் என்று பாரதி திட்டம் வகுத்து கொடுத்தார்.

பாரதி கூறியபடி அதிகாலையில் அவரது வீட்டிற்கு சென்று கோபால கிருஷ்ணனை தீர்த்துக்கட்டினேன். கொள்ளை நாடகம் ஆடுவதற்காக பாரதியையும் கட்டிப்போட்டு நகை, பணத்தை எடுத்து சென்றேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

கொலை நடந்து சிறிது நேரத்திலேயே கொலையாளியை கைது செய்த ரோந்து போலீஸ்காரர்கள் சமுத்திரவேல், சங்கரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

ரோந்து போலீசார் விழிப்புடன் செயல்பட்டதால் குற்றவாளிகள் உடனடியாக சிக்கினர். இல்லையெனில் போலீஸ் விசாரணை திசை திரும்பி இருக்கும்.

தந்தை கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் தாயும் ஜெயிலுக்கு சென்றதால் அவர்களது ஒரு வயது குழந்தை தவிக்கிறது.

கள்ளக்காதலனை ஏவி கணவரை மனைவியே கொலை செய்த சம்பவம் வடபழனி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தந்தையை போன் செய்து அழைத்து கொடூரமாக கொலை செய்தேன்: கைதான மகன் வாக்குமூலம்..!!
Next post 10 ஆண்டு தண்டனை பெற்றும் திருந்தவில்லை: 12 வயது சிறுமியை கற்பழித்து கொன்ற காமக்கொடூரன்…!!