By 1 December 2016 0 Comments

முட்டைக்கோஸ் சாப்பிடுவதால் இவ்வளவு ஆபத்து உள்ளதா?

625-500-560-350-160-300-053-800-748-160-70-4முட்டைக்கோஸ், ப்ராக்கோலி, காலிஃப்ளவர் மற்றும் களைக்கோஸ் போன்றவை ஒரே வகை குடும்பத்தை சேர்ந்தது.

பெரிய அளவில் உருண்டையான இலை கொண்ட இந்த முட்டைக்கோஸ் பல நோய்களை குணப்படுத்தும் மருந்ததாக பயன்படுத்தப்படுகிறது.

ஆனால் இது பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா?

முட்டைக்கோஸ் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள்

முட்டைக் கோஸை நாம் தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வருவதன் மூலம் நாம் சாப்பிடும் உணவுகளின் செரிமானத்தின் தன்மையை குறைத்து, வயிற்றில் வாய்யுக்களை அதிகரிக்கச் செய்கிறது, மேலும் அதிகமான ஏப்பம், வாய்வுத் தொல்லைகள், வயிற்றில் வலிகள், வீக்கம் போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

முட்டைக்கோஸ் காய்கறியில் உள்ள உணவு இழைகளை, புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக சாப்பிட்டு வந்தால், கடுமையான வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும் ஆபத்துகள் அதிகமாக உள்ளது. எனவே புற்று நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் முட்டைக்கோஸ் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

நம்முடைய உடம்பில் அயோடின் குறைபாடுகள் உள்ளவர்கள் முட்டைக்கோஸை அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் முட்டைக்கோஸானது நம் உடம்பில் உள்ள தைராய்டு ஹார்மோன்களின் சுரப்பை அதிகப்படுத்துகிறது.

நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவாக முட்டைக்கோஸ் இருந்தாலும், இது நமது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைத்து உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
அறுவை சிகிச்சை செய்துக் கொள்ளும் நோயாளிகள் இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே முட்டைக்கோஸ் சாப்பிடுவதை முற்றிலும் நிறுத்தி விட வேண்டும். இல்லையெனில் நமது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைத்து பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

கர்ப்பிணி பெண்கள் தொடர்ந்து தங்களின் உணவில் முட்டைக்கோஸை அதிகமாக சேர்த்துக் கொண்டால், தாய்பாலின் சுரப்புகள் குறைந்து மார்பகத்தில் வலியை ஏற்படுத்தும். எனவே கர்ப்பிணி பெண்கள் முட்டைக்கோஸ் அதிகம் சாப்பிடுவதை தவிர்த்து வாரம் ஒருமுறை மட்டும் சேர்த்துக் கொள்ளவது நல்லது.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… http://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D



Post a Comment

Protected by WP Anti Spam