சிங்கத்திற்கு பயிற்சி அளித்த வீரர்: சிங்கத்திற்கு இரையான பரிதாபம்…!!

Read Time:2 Minute, 12 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-7எகிப்தில் பயிற்சி வீரர் ஒருவர் சிங்கத்துடன் சேர்ந்து சர்க்கஸ் செய்த போது, அவர் கொடூரமாக தாக்கப்பட்டு இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எகிப்தில் உள்ள Alexandria பகுதியில் சர்க்கஸ் நிறுவனம் செயல்பட்டு வந்துள்ளது. அங்கு பொதுமக்கள் பலரும் கூடியிருந்த நிலையில் சர்க்கஸ் தொடங்கியுள்ளது.

அப்போது சிங்கம் தொடர்பாக சர்க்கஸ் நிகழ்த்துவதற்காக Shaheen ( 35) என்ற பயிற்சி வீரர் கூண்டிற்குள் இருந்துள்ளார். அப்போது அவர் அங்கிருந்த மூன்று சிங்கங்களையும் சாகசம் காட்டுவதற்காக ஒவ்வொன்றையும் தன் கையால் இருந்த தடியை வைத்து அடித்து, இரண்டு சிங்கங்களையும் மேஜை மீது அமர்த்தி, மற்றொன்றை அங்கிருந்த ஏணியின் மீது ஏற வைத்துள்ளார்.

அப்போது மேஜை மீது உட்கார்ந்திருந்து சிங்கம் ஒன்று திடீரென்று அவரை நோக்கி பாய்ந்து கடிக்கத் துவங்கியது. இதனால் பதற்றமடைந்த மற்ற பயிற்சி வீரர்கள் சிங்கத்தை விரட்ட முற்பட்ட போதும், அவரை சிங்கம் பயங்கரமாக தாக்கியுள்ளது.

அதன் பின்னர் சிங்கம் விரட்டப்பட்டு, அவரை உடனடியாக அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிழந்துவிட்டதாக கூறப்படுகிறது. இது அங்கிருந்த பொதுமக்கள் மத்தியில் நடந்ததால் இது தொடர்பான வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது.

மேலும் Shaheen கடந்த 10 வருடங்களாக குறித்த சர்க்கஸ் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முட்டைக்கோஸ் சாப்பிடுவதால் இவ்வளவு ஆபத்து உள்ளதா?
Next post தந்தை-மகனின் வெறிச்செயல்: இப்படியும் கொடூரமாக கொலை செய்வார்களா?