திருமண வாழ்க்கை சிறக்க…!!

Read Time:4 Minute, 0 Second

marriage-hands-i-will-always-protect-you-ne-8948596-624x436-300x210மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை வாழ துணையின் உற்சாக ஒப்புதல் இல்லாமல் எந்த காரியங்களையும் தீர்மா னிக்க வேண்டாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

திருமண வாழ்க்கையில் கணவன், மனைவி இரு வரும் தங்கள் துணைகளை தங்களில் சரிபாதியாக பாவித்துக் கொள்ள வேண்டும். கணவன், மனைவி இருவரில் யாராவது ஒருவர் தொடர்ந்து விட்டுக் கொடுத்துக் கொண்டே இருக்கக் கூடாது.

அப்படி விட்டுக்கொண்டிருந்தால், ஒரு கட்டத்தில் தனது உரிமைகளை ஏன் விட்டுக் கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற எண்ணம் தலைதூக்க ஆரம்பிக்கும்.

இந்த எண்ணம் வாய்த் தகராறில் ஆரம்பித்து விவாகரத்து வரை செல்ல வாய்ப்பு உள்ளது. எனவே தம்பதியர் தங்களின் எண்ணங்கள், குண நலன்கள், எதிர்பார்ப்பு உள்ளிட்டவை குறித்து தங்கள் துணையிடம் சரியான நேரத்தில் கண்ணியமான முறையில் தெரிவித்து விட வேண்டியது மிகவும் அவசி யம்.

திருமணமான ஆரம்ப காலத்திலோ, காதலிக்கும் போதோ பரிசுப்பொருள்களை அதிகமாக வாங்கி கொடுப்பது வழக்கம். நாளாக நாளாக அந்த குணம் குறைந்துவிடும். இதனால் சில தம்பதியினருக்குள் கருத்து வேறுபாடுகள் தோன்ற ஆரம்பிக்கும். பரிசுப் பொருள்களின் மீதான ஈடுபாட்டால் அல்ல, தன் மீது உள்ள அன்பு குறைந்து விட்டது என எண்ணம் தோன்றும் காரணத்தினால் தான் இவ்வாறு கருத்து வேறுபாடுகள் தொடங்கும்.

திருமணம் நடப்பது வரை உடல் தோற்றத்தின் மீது அதிக கவனம் கொள்பவர்களில் பலர், திருமணத்துக்குப் பிறகு கவனம் செலுத்துவதில்லை. இதனால் உடலின் எடை அதிகரித்து தங்களின் எடுப்பான தோற்றத்தை இழக்க நேரிடுகிறது. இதன் மூலம் தங்கள் துணையின் வெறுப்புக்கு ஆளாக நேரிடலாம். உடலை எப்போதும் கட்டுக் கோப்பாக மிடுக்காக தம்பதியினர் வைத்துக் கொள்வது சிறந்தது.

துணையிடம் உண்மையை மறைக்க தொடர்ந்து பலர் முயற்சி செய்வது வழக்கம். இந்த விஷயத்தில் கணவனா அல்லது மனைவியா என்ற வேறுபாடு கிடையாது. தங்களது இல்லற வாழ்க்கை பாதிக்கப்பட்டுவிடுமோ எனத் தொடர்ந்து பலர் உண்மையை மறைத்து வருவார்கள்.

ஒரு நாள் உண்மை தெரியவரும் நிலையில், மிகப் பெரிய பிரச்னையாக உருவெடுத்து விவாகரத்து வரை செல்லும் அளவுக்கு நிலைமை மோசமாகும். தம்பதியர் ஒரு வாரத்தில் குறைந்தது 15 மணி நேரம் தனிமையாக இருக்க வேண்டும். தங்களுக்குள் பிரச்சனை நிலவினால் 25 மணி நேரம்கூட செலவழிக்கலாம்.

*** இதுபோன்ற “அவ்வப்போது கிளாமர்” செய்திகளை பார்வையிட இங்கே அழுத்தவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குளிக்காலத்தில் குழந்தைகளுக்கு அவசியமாக செய்ய வேண்டியது என்ன தெரியுமா?
Next post இது ஓரு தொற்று நோய்…இந்த நோய் நிச்சயமாக நமக்கும் இருக்கும்..!! வீடியோ