நாடா புயலை அடுத்து சீறிவரும் வர்டா புயல்! ஆபத்தானதாம்…!!

Read Time:2 Minute, 51 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70வங்கக்கடலின் தென்கிழக்கில் உருவான நாடா புயல், காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பனிப்பொழிவோடு போய்விட்டது.

இந்நிலையில் நாடா புயல் கரையை கடந்து விட்டது என மகிழ்ச்சியில் இருந்த மக்கள் மத்தியில் அடுத்த ஆபத்தாக வர்டா என்ர புயல் உருவாகியுள்ளது.

இது குறித்து நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தகட்டூரில் உள்ள தேநீர் கடையில், வானசாஸ்திர வானிலை ஆராய்ச்சி ஆர்வலர் ந.செல்வகுமார், வழக்கம்போல வெள்ளிக்கிழமை எழுதி ஒட்டியுள்ள வானிலை குறித்த தகவலானது;

நாடா புயல் சுழற்சியின்போது, நிலப்பரப்பில் நிலவிய இமயமலை குளிரை வெகுவாக ஈர்த்துக்கொண்டதால், போதிய கடல் சூடு இல்லாமல் விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி அதிக மழையில்லாமல் வெறும் பனிப்பொழிவோடு போய்விட்டது.

இந்நிலையில், மலேசியா-இந்தோனேஷியா இடைப்பட்ட கடல் பரப்பில் தற்போது புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

அது, டிசம்பர் 4-ஆம் திகதி தெற்கு அந்தமான் கடல் பரப்பை வந்தடைந்து தாழ்வு மண்டலமாக மாறி, தென்கிழக்கு வங்கக் கடலில் வடகிழக்காக நகர்ந்து புயலாக தீவிரமடையும் என்றும் அதற்கு பெயர் சூட்டும் வரிசையில் வர்டா என்றழைக்கப்படும் என எழுதப்பட்டிருந்தது.

மணிக்கு 150 கி.மீ. தீவிரமடையும் இந்த புயல் டிசம்பர் 8, 9, 10 ஆகிய திகதிகளில் கரையை கடக்க வாய்ப்புள்ளது.

இது, தற்போது உள்ள சூழலில் ஆந்திரத்தை நோக்கிச் செல்லும் வாய்ப்புகள் (70 சதவீதம்) அதிகம் எனவும் புதுவை, தமிழக (புதுச்சேரி-சென்னை,நெல்லூர்) பகுதிக்கு வரும் வாய்ப்பு மிகக் குறைவு என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தப் புயல் தமிழகத்தை சற்று நெருங்கி வந்தால் பலத்த மழைக்கு வாய்ப்பு ஏற்படும் என வானிலை ஆராய்ச்சி ஆர்வலர் ந.செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எந்த இடத்தில் உங்களுக்கு கொழுப்புகள் அதிகமாக உள்ளது? அதை எவ்வாறு கரைக்கலாம்..!!
Next post கஞ்சா தோட்டங்களாக மாற உள்ள பூந்தோட்டங்கள்…!!