கஞ்சா தோட்டங்களாக மாற உள்ள பூந்தோட்டங்கள்…!!

Read Time:2 Minute, 24 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-1மக்களுக்கும், இளைஞர்களுக்கும் அதிக அளவில் நலத்திட்ட உதவிகள் வழங்கவும் அரசு கஜானாவை நிரப்பவும் கஞ்சா செடி விளைச்சலை அதிக அளவில் செய்யலாம் என அந்நாட்டு விவசாயிகளுக்கு கனடா அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கனடாவில் லாவண்டர் போன்ற மலர்களை விவசாயிகள் இதுவரை அதிகளவில் பயிரிட்டு வந்தனர்.

அங்கு மருத்துவ தேவைக்காக கஞ்சா ஒரு குறிப்பிட்ட அளவுக்கு பயிரிடப்படுவதுண்டு, இதற்கு அந்நாட்டு சட்டமே அனுமதி வழங்கியுள்ளது.

இந்த நிலையில் இது சம்மந்தமான ஒரு முக்கிய அறிக்கையை கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ருடூ வெளியிட்டுள்ளார்.

அதில், அடுத்த ஆண்டு முதல் கஞ்சா செடிகளை அதிக அளவில் விவசாயிகள் பயிரிட வலியுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த இரண்டாண்டுகளில், அதாவது 2018ல் 13,000 கிலோ அளவுக்கு கஞ்சா பயிர் விளைச்சல் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இதன் படி கணக்கிட்டு பார்த்தால் 2021 ஆண்டில் கனடா நாட்டில் 3.8 மில்லியன் மக்கள் கஞ்சாவை உபயோகப்படுத்த வாய்ப்புள்ளது.

இதன் மூலம் 2021 ஆண்டில் $6 பில்லியன் அளவு கஞ்சா மூலம் பணம் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.

இதை விளைய வைக்கும் விவசாயிகள் பாதுகாப்பான முகமூடிகள், கை உறைகள், அதற்கான காலணிகள் கொண்டு தான் இதில் ஈடுபடுவார்கள் என அந்நாட்டு சுகாதார துறை மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதன் மூலம் கிடைக்கும் வருவாயை மக்கள் மற்றும் இளைஞர்கள் மேம்பாட்டு பணிக்காக செலவிட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

கஞ்சா உற்பத்தியில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபடுவார்கள் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாடா புயலை அடுத்து சீறிவரும் வர்டா புயல்! ஆபத்தானதாம்…!!
Next post சேலம் கல்லூரியில் படிக்கும் கென்யா நாட்டு மாணவி கற்பழிப்பு: வாலிபர் கைது…!!