விடுதலைப்புலிகளின் ஆயுத கிடங்கு மீது இலங்கை ராணுவம் குண்டுவீச்சு

Read Time:4 Minute, 58 Second

sl-flag.gifவிடுதலைப்புலிகளின் ஆயுத கிடங்கு மீது இலங்கை விமானங்கள் குண்டு வீசி தாக்கின.இலங்கையில் மாவிலாறு அணை தொடர்பாக விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து யாழ்ப்பாணத்தை கைப்பற்ற விடுதலைப்புலிகள் சுற்றி வளைத்து தாக்கி வருகின்றனர். யாழ்ப்பாணத்தின் தெற்குப் பகுதியில் உள்ள விடுதலைப்புலிகளின் ஆயுதக் கிடங்கு மீது விமானங்கள் நேற்று குண்டு வீசி தாக்கின. இதில் அந்த கிடங்கில் இருந்து வெடிபொருட்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இந்த சம்பவத்தில் விடுதலைப்புலிகள் தரப்பில் உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதா? என்பது பற்றி தெரியவில்லை என்று ராணுவம் கூறி உள்ளது.

இதற்கு பதிலடியாக, மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுனாதீவில் உள்ள ராணுவ முகாமை குறி வைத்து புலிகள் ராக்கெட் மற்றும் சிறுரகபீரங்கிகள் மூலம் சரமாரியாக குண்டு வீசி தாக்கினர். அச்சுவேலி பகுதியில் விடுதலைப்புலிகள் தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் செத்தார்.

கண்ணிவெடி சிக்கியது

இந்நிலையில் கொழும்பு நகரின் கிழக்குப் பகுதியில் உள்ள போரெல்லா மார்க்கெட்டில் நேற்று சக்தி வாய்ந்த கண்ணி வெடி கண்டுபிடிக்கப்பட்டது. காய்கறி வண்டி ஒன்றில் மறைத்து வைத்திருந்த அந்த கண்ணிவெடியை போலீசார் கைப்பற்றி செயலிழக்கச் செய்தனர். இதன் எடை 15 கிலோ ஆகும்.

தெற்காசிய விளையாட்டு போட்டிக்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 4 ஆயிரம் வீரர்-வீராங்கனைகள் கொழும்பு நகரில் தங்கி உள்ளனர். இந்நிலையில் சக்தி வாய்ந்த கண்ணிவெடி கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தாக்குதலை நிறுத்த தயார்

இதனிடையே, விடுதலைப்புலிகள் மீதான தாக்குதலை நிறுத்த தயார் என்று இலங்கை அதிபர் மகிந்தா ராஜ பக்சே அறிவித்து உள்ளார். கொழும்பில் இலங்கைக்கு நன்கொடை வழங்கும் அமெரிக்கா, ஐரோப்பிய ïனியன், ஜப்பான் மற்றும் நார்வே நாடுகளின் பிரதிநிதிகளை நேற்றுமுன்தினம் அவர் சந்தித்து பேசினார். அப்போது தற்போது நடந்து வரும் சண்டையை நிறுத்த புலிகள் திட்டங்களை முன் வைத்தால், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு அதுபற்றி தீவிரமாக பரிசீலிக்கப்படும் என்று அவர் கூறினார்.

விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில்தான் ராணுவம் செயல்படுகிறது. புலிகள் பேச்சுவார்த்தைக்கு திரும்ப காத்து இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அதிபர் அலுவலக செய்திக்குறிப்பில் இந்த தகவல்கள் கூறப்பட்டு உள்ளன.

இறக்குமதிக்கு அனுமதி

இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் நிலவும் உணவுப் பற்றாக்குறையை சமாளிக்க தென்னிந்தியாவில் இருந்து நேரடியாக பொருட்களை இறக்குமதி செய்து கொள்ள இலங்கை அரசு அனுமதி அளித்து உள்ளது. அந்நாட்டின் இந்து சமய மந்திரி டக்ளஸ் தேவானந்தா இந்த தகவலை தெரிவித்து உள்ளார்.

தென்னிந்தியாவின் துறைமுகங்களில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்யும் யாழ்ப்பாண வியாபாரிகளுக்கு வழக்கமான விதிமுறைகளில் இருந்து விலக்கு அளிக்கப்படும். 2 ஆயிரம் டன் உணவுப் பொருட்களுடன் ஒரு கப்பல் கொழும்பில் இருந்து அனுப்பப்பட்டு உள்ளது. அந்தக் கப்பல் இன்னும் ஓன்றிரண்டு நாளில் யாழ்ப்பாணத்தை சென்றடையும் என்று அவர் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post வன்னிப்புலிகளின் வடமுனை முகாம் மீது TMVPஅதிரடி முற்றுகைத் தாக்குதல். ஐவர் பலி, மூவர் கைது
Next post தேனீக்கள் கொட்டியதால் ஒருவர் பலி