சென்னை அப்போலோவில் என்ன நடக்கிறது?

Read Time:4 Minute, 41 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70உடல்நலக்குறைவு காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ஆம் திகதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) இருந்து, சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் இன்று மாலை முதல் அப்போலோ வளாகம் பரபரப்படைந்துள்ளது.

மாலை 7.30 மணி

குறிப்பாக அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் அனைத்து உயர் பொலிஸார்களும் அப்போலோ விரைந்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. நீண்ட நாட்களுக்கு பின்னர், அரசுத்துறை உயர் அதிகாரிகள் அப்போலோ விரைந்துள்ளதால், மருத்துவமனை வளாகம் பரபரப்பாக காணப்படுகிறது. சென்னையில் இருக்கும் காவல் நிலையங்களுக்கு சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறதாம்.

மருத்துவர்கள், ஜெயலலிதாவின் இதய செயல்பாடுகளை உற்று நோக்கி வருகிறார்களாம்

இதனால் கிரீம்ஸ் சாலையில் இருக்கும் அப்போலோவில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது

இரவு 8.30 மணி

மதுசூதனன், சைதை துரைசாமி, பா. வளர்மதி ஆகியோர் தற்போது அப்போலோ மருத்துவமனை வந்துள்ளார்கள். அப்போலோ மருத்துவமனையின் வாயிலில் அதிமுகவினர் குவிந்த வண்ணம் இருக்கிறார்கள். ஏறத்தாழ அனைத்து தமிழக அரசு உயர் அதிகாரிகள், காவல் துறையினர் அப்போலோவிற்கு வந்து இருக்கிறார்கள். அப்போலோவில் பரபரப்பான சூழலில் நிலவுகிறது.

இரவு 9.30 மணி

அப்போலோ மருத்துவமனை வளாகம் மீண்டும் பரபரப்படைந்துள்ளது இந்நிலையில் அப்போலோ மருத்துவமனை சற்றுமுன் அறிக்கை அனுப்பியுள்ளது. அதில், ஜெயலிலதாவுக்கு மாலை இதய துடிப்பு முடக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதற்காக இதய மற்றும் நுரையீரல் துறை நிபுணர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர் என்றும் அப்போலா தெரிவித்துள்ளது.

இரவு 11:30 PM

* 30 கம்பெனி சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்னை வந்துள்ளனர்.

* ’முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் முழு உடல்நலம் பெற வேண்டும்; பொதுச்சேவையை தொடர வேண்டும் என்று விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன்!’ – ராமதாஸ் அறிக்கை

பிரதமர் மோடி நாளை காலை சென்னை வர உள்ளதாக தகவல்.

* ’தமிழக முதல்வர் ஜெயலலிதா மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிந்து கவலையுற்றேன். அவர் விரைவில் பூரண நலம் பெற பிரார்திக்கிறேன்!’ – இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ட்விட்டரில் வருத்தம்.

* சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு வந்தடைந்தார் தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ்

முதல்வர் ஜெயலலிதாவின் இதயம் கருவிகள் மூலம் இயல்பு நிலைக்கு கொண்டு வரச் செய்யும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மிகத் தேர்ந்த மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கிறார் முதல்வர். அவர் விரைவில் நலம்பெற அப்போலோ ஊழியர்கள் மேற்கொள்ளும் பிரார்த்தனையில் அனைவரும் பங்கெடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்!’ – அப்போலோ நிர்வாகம்

தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா குணமடைய வேண்டுகிறேன். அவர் விரைவில் நலம் பெறுவார் என நம்புகிறேன்!”- ராகுல் காந்தி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அப்பல்லோவில் குவிந்த தொண்டர்கள்! கதறி அழும் பெண்கள்- பரபரப்பில் தமிழகம்…!!
Next post பின்லாந்தில் உணவு விடுதி அருகே துப்பாகி சூடு: 3 பெண்கள் படுகொலை…!!