ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினார் மோடி…!!
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.
இன்று காலை டெல்லியில் இருந்து புறப்பட்ட மோடி, ராஜாஜி அரங்கம் வந்து ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இவருடன் ஆளுநர் வித்யாசாகர் ராவ், மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு மற்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உடன் வந்தனர்.
இதன்போது பிரதமர் மோடி, முதல்வர் ஓபிஎஸ், சசிகலாவுக்கு ஆறுதல் தெரிவித்தார் என தெரிவிக்கப்படுகின்றது.