By 7 December 2016 0 Comments

டெல்லியில் பனி மூட்டம்: விமானங்கள் – ரெயில்கள் தாமதம்…!!

201612071058570025_dense-fog-hits-flights-and-trains-delayed-in-delhi_secvpfடெல்லியில் கடந்த வாரம் கடுமையான பனி மூட்டம் இருந்தது. இதனால் நூற்றுக்கணக்கான விமானங்கள் பாதிக்கப்பட்டது. பல்வேறு விமானங்களும் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் டெல்லியில் இன்றும் கடுமையான பனி மூட்டம் இருந்தது. 50 மீட்டர்வரை ஆட்கள் கண்ணுக்கு தெரியாத வகையில் பனி காணப்பட்டது. இதனால் விமானம், ரெயில் சேவையில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.

51 விமானங்கள் பாதிக்கப்பட்டது. 22 உள்ளூர் விமானங்கள் தாமதமாக வருகின்றன. 3 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டது. பல்வேறு சர்வதேச விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன.

ரெயில்கள் சேவையிலும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. 85 ரெயில்கள் பனி மூட்டத்தால் பாதிக்கப்பட்டது. ராஜ்தானி, சதாப்தி, உள்பட 71 ரெயில்கள் தாமதமாக வருகின்றன. 3 ரெயில்கள் ரத்து செய்ய்பபட்டு உள்ளது. 11 ரெயில்களின் அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பனி மூட்டம் டெல்லியில் மேலும் சில தினங்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



Post a Comment

Protected by WP Anti Spam