9 வயது சிறுவனிடம் தவறாக நடந்த கிறிஸ்துமஸ் தாத்தா! தாய் அதிரடி…!!
அமெரிக்காவில் கிறிஸ்மஸ் தாத்தா 9 வயது சிறுவனிடம் மன்னிப்பு கோரிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கிறிஸ்மஸ் தாத்தா வேடமிட்ட St Nick என்ற நபர், Anthony Mayse என்ற 9 வயது சிறுவனை அவமானப்படுத்தியதற்காக அவனிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
சம்பவத்தன்று Anthony Mayse அம்மா தனது இரண்டு ஆண் குழந்தைகளையும் கிறிஸ்துமஸ் தாத்தாவுடன் புகைப்படம் எடுக்க வட கரோலினாவின் மத்திய நகரத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.
அப்போது Anthony Mayse கிறிஸ்துமஸ் தாத்தாவிடம் தனக்கு கிறிஸ்துமஸ்பரிசாக ஐபாட் மற்றும் ஆளில்லா விமானம் ஒன்று வேண்டும் என கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்த கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்ட St Nick, சிறுவனின் உடலை கண்டு அவனை அவமானப்படுத்தும் வகையில் பர்கர் போன்ற உணவுகள் உண்பதை நிறுத்துமாறு தெரிவித்துள்ளார்.
இதைகேட்டு மனமுடைந்த சிறுவன் அழுது கொண்டு வெளியே வந்துள்ளான். இதைக்கண்ட சிறுவனின் தாய் நடந்ததை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
பின்னர், அவமரியாதையாக நடந்துக்கொண்ட கிறிஸ்துமஸ் தாத்தாவை சிறுவனிடம் மன்னிப்பு கேட்க வைத்துள்ளார்.
Average Rating