By 9 December 2016 0 Comments

மழலை மொழி பேசி அசத்தும் ஒட்டி பிறந்த இரட்டையர்கள்…!!

625-500-560-350-160-300-053-800-748-160-70-1அமெரிக்காவில் தலை ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகள் வெற்றிகரமாக பிரிக்கப்பட்ட பின்னர் அழகாக மழலை மொழியில் பேசிக் கொள்ளும் வீடியோ வைரலாகி வருகிறது.

அமெரிக்காவில் நியூயார்க்கை சேர்ந்த தம்பதி கிறிஸ்டியன் மேக்டொனால்டு- நிகோல், இவர்களுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 9ஆம் திகதி தலை ஒட்டிய நிலையில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன.

இவர்களுக்கு ஜடோன், அணியாஸ் என பெயரிட்டனர். தலை ஒட்டி பிறந்த இரட்டையர்களை தனித்தனியாக பிரிக்க நியூயார்க்கை சேர்ந்த மண்டை ஓடு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜேம்ஸ் குட்ரிச்சை மேக்டொனால்டு நிகோல் தம்பதி அணுகினர்.

பிறந்து ஓராண்டுக்கு பிறகு அதற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.

அவரது அறிவுரையின் பேரில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஆப்ரேஷனுக்காக ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதை தொடர்ந்து அக்டோபர் 13ம் திகதி இரட்டை குழந்தைகளை பிரிக்க மருத்துவ குழு 27 மணி நேர ஆப்ரேஷனை வெற்றிகரமாக நடத்தியதில் இருவரும் தனித் தனியாக பிரிக்கப்பட்டனர்.

தொடர்ந்து இருவரும் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கும் நிலையில், மழலை மொழியில் பேசிக் கொள்ளும் வீடியோ வெளியாகியுள்ளது.

13 மாதங்களாக இந்த தருணத்திற்காகவே காத்திருந்தாகவும், அளவில்லா மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் பெற்றோர் மகிழ்ச்சியுடன் புன்னகைக்கின்றனர்.



Post a Comment

Protected by WP Anti Spam