கொலம்பியா விமான விபத்தில் உயிர் பிழைத்த பிரேசில் வீரர்..!!

Read Time:2 Minute, 18 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-2கடந்த வாரம் மத்திய தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் இருந்து கொலம்பியா சென்று கொண்டிருந்த விமானம் விபத்துகுள்ளானதில் 76 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் உயிர்பிழைத்த கால்பந்து வீரர் தொடர்பான வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

பிரேஸில் நாட்டு கால்பந்து வீரர்களுடன் கடந்த வாரம் சென்ற தனி விமானம் ஒன்று கொலம்பியாவில் மலை மீது மோதி விபத்துக்குள்ளானதில் கால்பந்து வீரர்கள் உள்பட 76 பேர் உயிரிழந்தனர்.

சிலர் மட்டும் படுகாயங்களுடன் கொலம்பியாவின் சோமர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், பிரேசில் Chapecoense அணி கால்பந்து வீரர் Alan Ruschel (27) சம்மந்தமான வீடியோ காட்சி வெளியாகி வெளியாகியுள்ளது

அதில், Alan-க்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் Sonagli மருத்துவமனை வளாகத்தில் அவர் கையை பிடித்து கொள்ள அவர் மெதுவாக நடப்பது போலவும், பின்னர் தன் கைரேகை விரலை வெற்றி சின்னம் போல உயர்த்தி காட்டுவது போல அந்த வீடியோவில் உள்ளது.

Alan அதில் கூறியதாவது, நான் விரைவாக நலமடைந்து வருகிறேன். சீக்கிரமாக என் தாய்நாடான பிரேசிலுக்கு வந்து விடுவேன்.

எனக்கு ஆதரவளித்த மற்றும் துணையிருந்த அனைவருக்கும் நன்றி என Alan கூறியுள்ளார்.

இவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் Sonagli கூறுகையில், அவர் மிக நலமாக சுயநினைவோடு உள்ளார்.

அவர் முதுகெலும்பில் இந்த பிரச்சனையும் இல்லை, அவர் நன்றாக நடக்கவும் செய்கிறார் என கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மழலை மொழி பேசி அசத்தும் ஒட்டி பிறந்த இரட்டையர்கள்…!!
Next post ஐஸ்வர்யாராய் தற்கொலைக்கு முயன்றாரா?: பட உலகில் பரபரப்பு…!!