நான் பார்க்கும் போது அந்த ஓட்டைகள் இல்லை! அப்பல்லோவில் ஜெ.உடலை பார்த்தவர் திடுக்கிடும் தகவல்…!!

Read Time:4 Minute, 8 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-7அப்போலோவில் 22 செப்டம்பர் -16 தொடங்கி சிகிச்சை பெற்று வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 4 டிசம்பர்-16 அன்று திடீர் மாரடைப்பு ஏற்பட, தீவிர சிகிச்சைக்குப் பிறகு, சிகிச்சை பலனளிக்காமல் 5 டிசம்பர்-16 அன்று இரவு 11:30 மணிக்கு இறந்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இறந்த ஜெயலலிதாவின் உடலை அப்போலோவிலிருந்து போயஸ் தோட்டம், ராஜாஜி ஹால் தொடங்கி எம்.ஜி.ஆர் சமாதியில் அவர் அடக்கம் செய்யப்படும் வரை எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாத்தது அவரை வைத்திருந்த ஐஸ் பெட்டி. இதனை ’flying squad ambulance service’ -ன் டாக்டர். சாந்தகுமார்தான் தயாரித்திருந்தார்.

ஜெ.வின் இறுதி நிமிடங்களுக்குப் பிறகு அவரது பூத உடலைப் பார்த்த சிலரில் ஒருவர். டாக்டர்.சாந்தகுமார் நம் கேள்விகளுக்கு பதிலளிக்கையில்.

முதல்வரின் உடலை எடுத்துச் செல்ல என்ன மாதிரியான பெட்டி தேவைப்பட்டது?

அதிக அழுத்தம் கொண்டு நீண்ட நேரம் உடலை சில்லுப்பாக வைத்திருக்கும் பெட்டி ஒன்று தேவைப்பட்டது. மூன்று மாதத்துக்கு ஒருமுறை அப்படியான பெட்டியை தயாரிப்பது வழக்கம், இரண்டு நாட்களுக்கு முன்பே அப்படி ஒரு புது பெட்டியை நான் தயார் செய்திருந்தேன். தங்க ப்ளேட்டிங் செய்யப்பட்டது. 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஆனது. முதல்வரின் உடலை எடுத்துச் செல்லதான் அதனை தயாரித்தேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.

எத்தனை மணிக்கு உங்களிடம் ஐஸ் பெட்டி கேட்டார்கள்?

அப்போலோ நிர்வாகத்திலிருந்து 11:45க்கு அழைப்பு வந்தது. முதல்வருக்கு என்றார்கள்.

முதலில் 10-11 மணிக்கு கேட்டார்கள் என்றீர்கள், பிறகு 11-11:30 என்றீர்களே?

அது முதல்வர் இறந்தது தாங்காமல் எமோஷனில் சொன்னேன் 11:50க்குதான் அங்கிருந்து அழைப்பு வந்தது.

இறந்த அவரது உடலைப் பார்த்த முதல் சில பேரில் நீங்களும் ஒருவர்…

ஆமாம்!. எப்படி நாம பார்த்தோமோ அப்படியே இருந்தது அந்த முகம். ஒரு மாசு இல்லை. பார்க்க மனதுக்கு கஷ்டமாக இருந்தது. அவங்களை நாங்க நான்கு பேர் சேர்ந்துதான் ஐஸ் பெட்டியின் மீது தூக்கி வைத்தோம். இத்தனைக்கும் அவர் வெயிட்டாக இருப்பார் என்றார்கள். தூக்கும்போது சாதாரண எடைதான் இருந்தார்.

அப்படியேதான் இருந்ததா? அவங்க முகத்தில் கன்னத்தில் இடது பக்கம் நான்கு ஓட்டை இருந்ததே?

நாங்கள் தூக்கி வைக்கும்போது முகத்தில் அந்த ஓட்டைகள் இல்லை. நாங்கள்தான் முகத்தை மற்றும் கை கால்களைக் கட்டினோம். அதற்குப் பிறகு தொலைக்காட்சியில் பார்க்கும்போதுதான் அந்த ஓட்டை இருந்தது. சிலர் அதனை எம்பாமிங் ஓட்டை என்கிறார்கள். ஆனால், நாங்கள் எம்பாமிங் செய்யப்பட்ட உடலைதான் பெட்டியில் வைத்தோம்,

நீங்கள் பார்க்கும்போது கன்னத்தில் ஓட்டை இல்லையா?

நிச்சயமாக நான் பார்க்கும்போது அப்படி ஓட்டை இல்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒரு இன்ச்யில் ஆபத்தை சந்தித்த மனிதர்கள்…..!! வீடியோ
Next post மரணப்படுக்கையில் முதலாளி! பிரியா விடை அளித்த நாய்…!!