சென்னை பெண் மாவோயிஸ்ட் உடலை தகனம் செய்ய தடை: கேரள ஐகோர்ட்டு உத்தரவு..!!

Read Time:1 Minute, 30 Second

201612100428139071_kerala-high-court-stays-cremation-of-woman-maoist-killed-in_secvpfகேரள மாநிலம் நிலம்பூர் வனப்பகுதியில் கடந்த மாதம் 24-ந் தேதி, கேரள மாநில போலீசாருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. அதில், மாவோயிஸ்ட் தலைவர் குப்பு தேவராஜ், பெண் மாவோயிஸ்ட் அஜிதா ஆகியோர் கொல்லப்பட்டனர். அஜிதா, சென்னையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, தமிழ்நாட்டை சேர்ந்த வக்கீல் பகத்சிங் என்பவர், தான் அஜிதாவின் வகுப்பு தோழர் என்றும், எனவே, அவரது உடலை தன்னிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரி, கேரள ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அம்மனு, நேற்று விசாரணைக்கு வந்தது. அஜிதாவின் உடலை தகனம் செய்ய 13-ந் தேதி வரை இடைக்கால தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மேலும், பகத்சிங், உண்மையிலேயே அஜிதாவின் நண்பர்தானா என்பதை ஆய்வு செய்யுமாறு போலீசுக்கு உத்தரவிட்டது.

தற்போது, அஜிதாவின் உடல், கோழிக்கோட்டில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காங்கோ வன்முறையில் 13 ஆயிரம் பேர் புலம்பெயர்ந்த அவலம்..!!
Next post ஜெயலலிதா சமாதியில் மணக்கோலத்தில் புதுமண தம்பதி அஞ்சலி..!!