அட.. ‘சாண்ட்விச்’க்கு இப்படி ஒரு கதை இருக்கா?.. சாண்ட்விச் பிரியர்களே தெரியுமா இது…!! வீடியோ

Read Time:4 Minute, 31 Second

sandwhich_001-w245தமிழர்களின் வாழ்வியல் உணவு அரிசிச் சோறும், இட்லி, தோசையும்தான் என்கிற காலமெல்லாம் மலையேறிப் போய் பீட்ஸா, பர்கர், சாண்ட்விச்களின் டைம் இது.

அதிலும் இந்த சாண்ட்விச் இருக்கிறதே…! முக்கால்வாசி குடும்பங்களில் இன்றைக்கு காலை உணவே அதுதான். இரண்டு பிரெட் துண்டுகளுக்கு நடுவில் ஜாம் தடவியோ, காய்கறிக் கலவையை வைத்து டோஸ்டரில் பொறித்தோ உள்ளே தள்ளிவிட்டு அலுவலகத்திற்கும், பள்ளிக்கும் பறந்து கொண்டிருக்கின்றார்கள் பலர்.

அந்த அளவிற்கு வீட்டில் இருக்கும் அம்மாக்களுக்கும், அலுவலகம் செல்லும் பெண்களுக்கும், பேச்சுலர்களுக்கும் காலை நேர பரபரப்பில் கைகொடுக்கும் சாண்ட்விச்சைக் கொண்டாடும் ஒருநாள்தான் இன்று… மகளிர் தினம், அன்னையர் தினம் கேள்விப்பட்டிருக்கிறோம்.. இதுக்கும் ஒரு தினமா என்று சாப்பிட்டுக்கொண்டே யோசிப்பவர்கள் எல்லாம் இதை மறக்காம படிச்சுடுங்க.

சாண்ட்விச் உருவானதே ஒரு செம சுவாரசியமான கதை. இங்கிலாந்தில் உள்ள சாண்ட்விச் என்னும் ஊரினை 1762ல் ஜான் மாண்டேகு என்னும் நிலப்பிரபு ஆட்சி செய்து வந்தார். சீட்டாட்டத்தில் உயிரையே வைத்திருந்த மாண்டேகுவிற்கு சீட்டு விளையாடும்போது சோறு, தண்ணி கூட வேண்டாம். ஆனால், வயிற்றுக்கு வேண்டுமே…பசிக்குமே!

அப்படி பசிக்கும்போது கைகளில் ஒட்டிக் கொண்டு சீட்டுகளைப் பிடிக்கவிடாமல் தடுக்கும், கரண்டி, கத்தி வைத்து சாப்பிடுவதால் சீட்டாட்டத்தை டிஸ்டர்ப் செய்யும் உணவு வகைகளை அவர் வெறுத்தார். இந்த பிரச்னைக்கான தீர்வாக அவர் கண்டுபிடித்த உட்டாலங்கடி ஐடியாதான் ’சாண்ட்விச்’. ஏற்கனவே மக்கள், ரொட்டி – பாலாடைக்கட்டி, ரொட்டி – காய்கறி என்றெல்லாம் சாப்பிட்டுக் கொண்டுதான் இருந்தார்கள்.

ஆனால், மாட்டிறைச்சி, இலை, தழை, பொடி வகைகளையெல்லாம் சேர்த்து புதுப்புது சாண்ட்விச் வகைகளை கண்டுபிடித்த பெருமை ஜான் மாண்டேகுவிற்குத்தான். ஒரு கையில் சீட்டுக் கட்டு, மறு கையில் சாண்ட்விச்…இதுதான் ஜான் மாண்டேகு.

மாண்டேகு தலைவராகப் பதவி வகித்த நகரத்தின் பெயரும் அதுவே என்பதால் அவரை சாண்விட்ச் பிரபு என்றுதான் மக்கள் அழைப்பார்களாம். அதனாலேயே ரொட்டித் துண்டுடன் விதவிதமான உணவுப் பொருட்களை இணைத்துச் சாப்பிடும் பதார்த்தத்துக்கும் அந்தப் பெயர் சூட்டப்பட்டது. ஜான் மாண்டேகுவின் பிறந்தநாள்தான் ஒவ்வொரு வருடமும் ‘சாண்ட்விச் தினம்’ என்று கொண்டாடப்படுகிறது. இதுதான் எஸ்டிடி…அய்யோ ‘ஹிஸ்ட்ரி’ பாஸ்!

அதான் ’சாண்ட்விச் டே’ ஹிஸ்ட்ரி தெரிஞ்சுபோச்சே. வேகமா போய், மழைக்கு இதமா பிரெட்டுக்கு நடுவில் சீஸ் தடவி, புதினா சட்னி, தயிர், வெங்காயம், தக்காளி, கரம் மசாலாவெல்லாம் போட்டு சூடா ஒண்ணு சாப்டலாம் வாங்க!

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குருநாதர் எம்.ஜி.ஆரை விஞ்சிய ஜெயலலிதா: ரஜினி புகழாரம்…!!
Next post சேலையில் இருக்கும் கவர்ச்சி வேறு எதிலும் இல்லை: காஜல் அகர்வால்…!!