விக்ராந்த்-சுசீந்திரனின் வெண்ணிலா கபடி குழு-2 பூஜையுடன் தொடக்கம்..!!

Read Time:1 Minute, 24 Second

201612101422242760_vennila-kabadi-kuzhu-2-movie-shooting-starts-with-pooja_secvpf7 வருடங்களுக்கு முன் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘வெண்ணிலா கபடி குழு’. கபடியை மையமாகக்கொண்டு வெளியான இப்படத்தின் மூலம் அறிமுகமான விஷ்ணுவிஷால், சூரி, அப்பு குட்டி போன்ற நடிகர்கள் தமிழ் சினிமாவில் இன்று தங்களுக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்கப்போவதாக இயக்குனர் சுசீந்திரன் அறிவித்துள்ளார். விக்ராந்த் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் செல்வசேகரன் இயக்க சாய் அற்புதம் சினிமாஸ் தயாரிக்கிறது.

‘வெண்ணிலா கபடி குழு’ போன்றே இப்படமும் கபடியை மையமாகக்கொண்டு உருவாகிறது. இதில் விக்ராந்துக்கு ஜோடியாக புதுமுகம் அர்த்தனாவும் முக்கிய வேடங்களில் பசுபதி, சூரி, அப்புக்குட்டி, கிஷோர், ரவி மரியா, யோகி பாபு ஆகியோரும் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சாக்லெட் சாப்பிட்டால் முகப்பரு அதிகரிக்கும்: எப்படி தெரியுமா?
Next post மாதவிடாய் காலத்தில் பெண்கள் செய்யும் தவறுகள் என்ன தெரியுமா?