யாழ்பாணத்தில் அமைதி திரிகோணமலையில் சண்டை

Read Time:2 Minute, 34 Second

JaffnaIslets_1.jpgகிட்டத்தட்ட இரு வாரத்துக்கு பின்னர் யாழ்ப்பாணத்தில் பெரிய அளவில் சண்டை ஏதும் இல்லாமல் அமைதி திரும்பியுள்ளது. ஆனால் கிழக்கில் உள்ள திரிகோணமலையில் 2 ராணுவ முகாம்களை விடுதலைப் புலிகள் தாக்கியுள்ளனர். மாவிலாறு தடுப்பணையின் மதகுகளை விடுதலைப் புலிகள் மூடியதைத் தொடர்ந்து ராணுவத்திற்கும், புலிகளுக்கும் கடும் சண்டைதொடங்கியது. கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான தாக்குதலை புலிகள் மேற்கொண்டனர்.

திரிகோணமலை துறைமுகத்தில் தாக்குதலைத் தொடங்கிய புலிகள், யாழ்ப்பாணத்தையும் முற்றறுகையிட்டு சரமாரியாக ராணுவத்தை தாக்கத் தொடங்கினர்.
ராணுவமும் பதிலுக்கு கடும் தாக்குதலை மேற்கொண்டது.

இந் நிலையில் கடந்த ஒரு வாரத்திற்குப் பிறகு யாழ்ப்பாணத்தில் சண்டை சற்றே ஓய்ந்துள்ளது. குறிப்பிடதக்க அளவிலான தாக்குதல் ஏதும் இன்று நடைபெறவிலலை என்று ராணுவம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் திரிகோணமலையில் 2 ராணுவ முகாம்கள் மீது புலிகள தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் யாரும் பலியாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கொழும்பு துறைமுகத்திலிருந்து நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு செஞ்சிலுவைச் சங்க கப்பல் ஒன்று யாழ்ப்பாணத்திற்கு கிளம்பியுள்ளது.

இந்தக் கப்பலுக்கு தாங்கள் அனுமதி கொடுத்துள்ளதாக விடுதலைப்புலிகளின் சமாதான செயலக தலைவர புலித்தேவன் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில்,

இதுவரை நாங்கள் தற்காப்பு தாக்குதலை மட்டுமே மேற்கொண்டுள்ளோம். எங்கள் மீது தாக்குதல் நடத்தியதால் அதற்குரிய பதிலடியைக் கொடுத்தோம், தொடர்ந்து கொடுப்போம் என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post 75 வயது முதியவர், 13 வயது சிறுமி `காதல்’ திருமணம்
Next post விடுதலைப்புலிகளுக்கு உதவியா? அமெரிக்க டாக்டரிடம் அதிரடி சோதனை