நீங்கள் தூங்கும் போது உங்கள் வாய் திறந்து இருக்குமா? அப்போ இது உங்களுக்கு தான்..!!

Read Time:3 Minute, 30 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-7பொதுவாக இரவில் தூங்கும் போது, நாம் அனைவரும் ஒவ்வொரு நிலையில் இருப்போம்.

உறங்கும் போது, சிலர் வாயை திறந்துக் கொண்டும், இன்னும் சிலர் குறட்டை விட்டு கொண்டும் தூங்குவார்கள்.

இது போன்ற நிலைகள் உறங்கும் போது, தன்னை அறியாமல் ஒவ்வொருவருக்கும் நடக்கும் ஒரு நிகழ்வாகும்.

வாயை திறந்து கொண்டு தூங்குவதால், காலையில் எழுந்ததும் அவர்களின் வாயில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசுகிறது.

எனவே நாம் தினமும் இரவில் வாயை திறந்து தூங்குவதால் நமக்கு ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.

வாயை திறந்து கொண்டு தூங்குவதால் என்ன நடக்கும்?

நமது வாயில் இருக்கும் எச்சில் தான் நம்முடைய வாயை பாதுகாக்கிறது. எனவே நாம் தூங்கும் போது, வாயிற்கு பாதுகாப்பை வழங்கும் எச்சில் வறட்சியடைந்து, அது பற்களையும் பாதிக்கிறது.

இயற்கையாகவே நமது வாயில் இருக்கும் எச்சில், வாயில் அமில உற்பத்தியை அதிகரிக்கச் செய்து, பாக்டீரியாக்களை அழித்து விடுகிறது.

நாம் தூங்கும் போது வாயை திறந்தவாறு தூங்குவதால் வாயில் அமில அளவுகள் அதிகரித்து, பல் அரிப்பு மற்றும் பற்கள் சொத்தை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

நமது வாயில் எச்சில் குறைவாக சுரக்கும் போது, பாக்டீரியாக்களால் உற்பத்தி செய்யப்படும் அமில அளவுகள் அதிகரித்து, பற்கள் வேகமாக சொத்தையாகும் பிரச்சனையை அடைகிறது.

தினமும் 8 மணிநேரம் தூக்கத்தை மேற்கொள்ளும் போது, நாம் நம் பற்களுக்கு அதிகமான தீங்கை விளைவிக்கின்றோம்.

ஆஸ்துமா அல்லது தூக்க பிரச்சனை இருப்பவர்களின், பற்களில் அதிகமாக சொத்தைப் பற்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. அதிலும் நமது வாயின் பின்புற பக்கத்தில் சொத்தைப் பற்கள் ஏற்படுகிறது.

நாம் இரவில் தூங்கும் போது, நேராக படுப்பதைத் தவிர்த்து, இடது பக்கமாக தூங்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இதனால் நாம் தூங்கும் போது, வாயை திறந்தவாறு இருப்பது தவிர்க்கப்பட்டு, பற்களின் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படுகிறது.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… https://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வேலைக்குச் செல்லும் பெண்களே!… இது உங்களுக்கான உற்சாக டிப்ஸ்…!!
Next post ரஜினி பிறந்தநாளில் ரசிகர்களுக்கு சிறப்பு விருந்து…!!