சுவிஸ் ரயிலில் ரூ.22 கோடி மதிப்பிலான பொருள் மாயம்: தீவிர விசாரணையில் பொலிஸ்…!!

Read Time:3 Minute, 28 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-6புகழ் பெற்ற வயலின் இசைக்கலைஞர் ஒருவரது 1.5 மில்லியன் பிராங்க் விலை மதிப்பிலான இசைக்கருவி ஒன்று ஜெனீவா அருகே ரயிலில் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகப் புகழ்பெற்ற வயலின் இசைக்கலைஞர்களில் ஒருவரான பாவெல் வெர்னிகோவ் என்பவரது விலை மதிப்பற்ற வயலின் இசைக்கருவிதான் ரயில் பயணம் செய்யும்போது ஜெனீவா அருகே மர்ம நபரால் களவாடப்பட்டுள்ளது.

குறித்த இசைக்கலைஞர் வெர்னிகோவ் வியன்னாவில் தமது இசை வகுப்புகளை முடித்துக் கொண்டு ஜெனீவா வழியாக ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்துள்ளார்.

Sion நோக்கி சென்று கொண்டிருந்த வெர்னிகோவ் தன்னுடன் தனது விலை மதிப்பற்ற வயலின் இசைக்கருவியையும் எடுத்து சென்றுள்ளார். குறித்த இசைக்கருவியானது 1747 ஆம் ஆண்டு பிரபல இசைக்கருவி தயாரிப்பாளரான Giovanni Battista Guadagnini என்பவரால் வடிவமைக்கப்பட்டதாகும். தற்போது குறித்த பழம்பெரும் கருவியை சிறப்பு கட்டணம் செலுத்தி வெர்னிகோவ் பயன்படுத்தி வருகிறார்.

குறித்த சம்பவத்தின் போது ரயில் Cornavin நிலையத்தில் சில நிமிடங்கள் நின்றுள்ளது. அப்போது பரபரப்பான அந்த ரயில் நிலையத்தில் இருந்து ஏராளமான பயணிகள் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்துள்ளனர்.

இந்த களேபரத்தின் இடையே இவரது கவனம் வயலின் பெட்டியில் இருந்து சிதறிய ஒரு சில நொடிகளில் குறித்த இசைக்கருவியை மர்ம நபர் எடுத்துசென்றுள்ளதாக கூறப்படுகிறது. களவு போன வயலின் இசைக்கருவியின் மதிப்பு 1.5 மில்லியன் பிராங்க்( இலங்கை மதிப்பில் ரூ.22,05,433,58.22)

மட்டுமின்றி வயலின் இசைக்கருவியை மீட்டும் 4 வில்லும் களவு போயுள்ளது. இதன் மதிப்பு 250,000 பிராங்க் என வெர்னோவ் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஜெனீவா காவல்துறையிடம் புகார் அளித்துள்ள வெர்னோவ், தமது சொந்த குழந்தையே தொலைந்து தவிக்கும் உணர்வை அனுபவிப்பதாக தெரிவித்துள்ளார். குறித்த பெட்டியில் இசைக்கருவி இருப்பதை அறியாத நபர் ஒருவர்தான் களவாடி சென்றிருக்க வேண்டும் எனவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

உக்ரைன் நாட்டைச் சேர்ந்த வெர்னிகோவ் புகழ்பெற்ற பல்வேறு இசை நிகழ்ச்சிகளை முன்னெடுத்து நடத்தியுள்ளார். மட்டுமல்ல சர்வதேச அரங்கில் பல சாதனைகளையும் விருதுகளையும் குவித்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விமானத்தில் இருந்து பெண் பயணியை தரதரவென இழுத்து வெளியேற்றிய பொலிஸ்: காரணம் என்ன?
Next post முஸ்லிம் டிரைவரின் மீது இனவெறி தாக்குதல் நடத்திய குடிகார பெண்…!!