சீனாவில் 107 வயது மூதாட்டிக்கு “பேஸ்மேக்கர்’ கருவி பொருத்தப்பட்டது

Read Time:1 Minute, 2 Second

China.map.1.jpgசீனாவில் 107 வயது மூதாட்டிக்கு இதயத் துடிப்பை சீராக்கும் “பேஸ்மேக்கர்’ கருவி வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது. அந்த மூதாட்டியின் பெயர் ஜாய் சியூயிங். சீனாவின் வடமேற்கு ஷான்ஸி மாகாணத்தைச் சேர்ந்த அவருக்கு சுவாசிப்பதில் சிரமம் இருந்தது. இதயத்துடிப்பு ஒரு நிமிடத்துக்கு 20 என்ற அளவில் இருந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அறுவைசிகிச்சை மூலம் “பேஸ்மேக்கர்’ பொருத்திய பிறகு நிமிடத்துக்கு 60 முறை என அவரது இதயத்துடிப்பின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

போதுமான உடற்பயிற்சி மற்றும் நகைச்சுவை உணர்வு ஆகியவையே சியூயிங்கின் நீண்ட ஆயுள் ரகசியம் என்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post விடுதலைப்புலிகளுக்கு உதவியா? அமெரிக்க டாக்டரிடம் அதிரடி சோதனை
Next post இனிமேல் மொத்த கிரகங்கள் 8 தான் `கிரகம்’ என்ற அந்தஸ்தை புளூட்டோ இழந்தது