மகேஷ் பாபுவுக்கு வில்லனாக மாறிய பரத்…!!

Read Time:1 Minute, 38 Second

201612131743477298_bharath-villain-to-mahesh-babu_secvpfநடிகர் பரத்துக்கு தற்போது கோலிவுட்டில் மார்க்கெட் அவ்வளவாக இல்லை. இருந்தபோதிலும், ‘பொட்டு’, ‘கடுகு’ என ஒரு சில படங்களிலே நடித்து வரும் பரத்துக்கு தற்போது ஜாக்பாட்டாக ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இப்படத்தில் அவர் ஹீரோவாக இல்லை, வில்லனாக நடிக்கிறார்.

ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது தெலுங்கில் மகேஷ் பாபுவை வைத்து அதிரடி ஆக்ஷன் படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்தில் வில்லனாக நடிக்க ஏற்கெனவே எஸ்.ஜே.சூர்யா ஒப்பந்தமாகியுள்ளார். இருப்பினும், இன்னொரு வில்லனாக நடிக்க ஏ.ஆர்.முருகதாசிடமிருந்து பரத்துக்கு அழைப்பு வர, எந்தவித மறுப்பும் சொல்லாமல் உடனே சென்று நடித்துக் கொடுத்து முடித்துள்ளார்.

வில்லன் வேடமாக இருந்தாலும் பரத்துக்கு இவருடைய கதாபாத்திரம் மிகவும் வலுவுள்ளதாக உள்ளதாம். இதனால்தான் உடனே நடிக்க சம்மதித்தாராம். ஏற்கெனவே ‘555’ படத்திற்காக தனது உடலை கட்டுமஸ்தாக மாற்றிய பரத், ஏ.ஆர்.முருகதாஸ் படத்துக்காக மேலும் தனது உடலை மெருகேற்றியிருக்கிறாராம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாரிஸ் மற்றும் பெல்ஜியம் தாக்குதலில் தொடர்புடைய 3 ஐ.எஸ் தீவிரவாதிகள் பலி: அமெரிக்கா..!!
Next post உங்கள் துணையை தவறான உறவில் இணையாமல் தடுக்க நீங்கள் செய்ய வேண்டிய 7 செயல்கள்…!!