டிரம்ப்பை கொல்ல முயன்ற பிரித்தானியா இளைஞர்! அதிரடி தண்டனை…!!

Read Time:1 Minute, 43 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-4அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப்பை சுட முயன்ற பிரித்தானியா இளைஞருக்கு அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி தண்டனை வழங்கியுள்ளது.

இச்செயலில் ஈடுபட்ட Dorking நகரத்தை சேர்ந்த 20 வயதான Michael Sanfordக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து லாஸ் வேகாஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த யூன் மாதம் டிரம்ப் பங்கேற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது அங்கிருந்த பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கியை பறித்த Michael Sanford, டிரம்பை சுட முயற்சித்துள்ளார்.

இந்நிலையில், Michael Sanfordடை கைது செய்து பொலிஸார் நடத்திய விசாரணையில், அவர் கடந்த ஒரு வருடமாக டிரம்பை சுட திட்டம் தீட்டி வந்தது தெரியவந்தது.

Michael Sanford இன் தாய் Lynee கூறியதாவது, நீதித்துறை பெரிய பிழை செய்துவிட்டது. Michael Sanford ஒரு நல்ல மனிதர்.

அவருக்கு உளவியல் ரீதியான உதவியளித்து வீட்டிற்கு திருப்பி அனுப்ப வேண்டும் என வருத்ததுடன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் Sanford வழக்கறிஞர் கூறியதாவது, Michael Sanford தண்டனை காலம் முடிந்து அவர் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட்டு சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவார் என தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனைவிக்காக பெற்ற மகளை கொடூரமாக கொன்ற பாசக்கார தந்தை: பதற வைக்கும் காரணம்…!!
Next post உணவு சாப்பிட்டதும் தூங்கக் கூடாது ஏன் தெரியுமா?