உலகின் சிறந்த தந்தை! மகளின் திருமண பரிசாக ஏழைகளுக்கு வீடு..!!
Read Time:1 Minute, 14 Second
மும்பையின் அவுரங்காபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் மனோஜ் முனோத் என்பவர் தனது மகள் ஷ்ரேயாவின் திருமணத்தை முன்னிட்டு குடிசையில் வசித்து வந்த 90 ஏழை மக்களுக்கு சுமார் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் வீடுகள் கட்டிக் கொடுத்திருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மேலும், மனோஜ் தனது மகளின் திருமணத்திற்காக 70 முதல் 80 லட்சம் வரை மட்டுமே செலவு செய்துள்ளார்.
இது குறித்து அவரது மகள் ஸ்ரேயா கூறும் போது, இது எனது தந்தை எனக்கு கொடுத்த மிகப்பெரிய திருமண பரிசாக நான் கருதுகிறேன் என்று மிகவும் மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.
ஒரு தந்தையாக இருந்து தனது மகள் ஸ்ரேயாவிற்கு கொடுத்த இந்த திருமண பரிசை மிகவும் விலை உயர்ந்ததாகக் கருதுகிறேன் என மனோஜ் முனோத் கூறியுள்ளார்.
Average Rating