சக பெண் ஊழியருக்கு பாலியல் சித்திரவதை: தூதரக அதிகாரி மீது அதிரடி நடவடிக்கை…!!

Read Time:3 Minute, 45 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-7சுவிட்சர்லாந்தில் பாலியல் வழக்கில் சிக்கி தலைமறைவான சிரியா தூதரக அதிகாரியை 20 ஆண்டுகளுக்கு பின்னர் பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மன்றத்தில் சிரியாவுக்கான தூதரக அதிகாரியாக செயல்பட்ட நபரே குறித்த பாலியல் வழக்கில் 20 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது கைதாகியுள்ளார்.

கடந்த 1997 ஆம் ஆண்டு குறித்த நபர் சக பெண் ஊழியர் ஒருவருடன் இரவு விருந்துக்கு சென்றுள்ளார். விருந்துக்கு பின்னர் அவரது முழு சம்மதம் இன்றியே குறித்த பெண் ஊழியரை வலுக்கட்டாயமாக தனது குடியிருப்புக்கு அழைத்து வந்துள்ளார்.

இதனையடுத்து அவரை நிர்பந்தப்படுத்தி உறவு கொண்ட சிரியா தூதரக அதிகாரி, அதன் பின்னர் குறித்த பெண்மணியிடம் தனது வக்கிரத்தை காட்டத்துவங்கியுள்ளார்.

தொடர்ந்து 5 மணி நேரம் அவரை பாலியல் சித்திரவதைக்கு உட்படுத்திய அந்த நபர், பிறப்புறுப்பு, மார்பு மற்றும் கால்களில் சிகரெட் கங்குகளால் காயப்படுத்தியுள்ளார்.

மட்டுமின்றி போத்தல் மற்றும் சில பொருட்களால் குறித்த பெண்மணியின் பிறப்புறுப்பை சிதைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர்ந்து தனது அதிகார பலத்தை பயன்படுத்தி சுவிஸ் நாட்டில் இருந்து தப்பித்து சென்றுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பான வழக்கில் பொலிசார் பலமுறை முயன்றும் தொடர்பான நபரை கைது செய்ய முடியாமல் திணறியது.

இந்த நிலையில் கடந்த 1999 ஆம் ஆண்டு குறித்த தேடப்படும் குற்றவாளி ஜேர்மனியில் வாழ்ந்து வருவதாக பொலிசாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றது.

இதனையடுத்து சுவிஸ் பொலிசார் மேற்கொண்ட அதிரடி நகர்வுகளால் 2001 ஆண்டு, விசாரணைக்கு குறித்த நபர் பங்குபெறாதபோதும், பாலியல் வன்கொடுமை, சித்திரவதை உள்ளிட்ட குற்றங்களுக்காக 13 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த வாரம் குறித்த நபர் பிரான்சின் Versailles பகுதியில் குடியிருப்பதாக ஜெனீவா பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட பொலிசார் செவ்வாய்க்கிழமை அவரை கைது செய்துள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை காலதாமதமாக கிடைத்த வெற்றி என்ற போதும் கடந்த 20 ஆண்டுகளாக மறக்க நினைக்கும் சம்பவங்களை மீண்டும் நினைவுபடுத்தும் செயலாக உள்ளது என பாதிக்கப்பட்ட அந்த பெண்மணி தெரிவித்துள்ளார்.

பிரன்சில் குறித்த சிரியா நாட்டவர் புது பெயருடனும் அரசியல் அகதி அந்தஸ்துடன் வாழ்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கற்பை இழப்பதை விட தற்கொலை செய்வதே மேல்! பெண்ணின் உருக்கமான கடிதம்..!!
Next post முட்டையின் மஞ்சள் கரு நல்லதா? கெட்டதா?