பாரீஸ் தாக்குதல் எதிரொலி: பிரான்சில் நெருக்கடி நிலை மேலும் 7 மாதங்கள் நீட்டிப்பு….!!

Read Time:2 Minute, 0 Second

201612150453158519_french-parliament-votes-to-extend-state-of-emergency-until_secvpfபிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 13-ந் தேதி மும்பை தாக்குதல் பாணியில் குண்டுகளை வெடித்தும், துப்பாக்கியால் சரமாரியாக சுட்டும் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல்கள் நடத்தினர். இந்த தாக்குதலில் 130 அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 7 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து அந்த நாட்டில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டது.

நெருக்கடி நிலையை ஜூலை மாதம் 15-ந் தேதி வரை மேலும் 7 மாதங்களுக்கு நீட்டிக்க வகை செய்து, அந்த நாட்டின் பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன்பேரில் நேற்று ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது.

இந்த ஓட்டெடுப்பில், நெருக்கடி நிலையை மேலும் 7 மாதங்கள் நீட்டிப்பதற்கு 288 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததால், தீர்மானம் நிறைவேறியது. எதிராக 32 பேர் மட்டுமே வாக்களித்தனர்.

வரும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் அந்த நாட்டின் அதிபர் தேர்தலும், பாராளுமன்ற தேர்தலும் நடக்க உள்ள நிலையில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் அச்சுறுத்துதல்கள் இருப்பதாக பிரான்ஸ் அரசு கருதித்தான், நெருக்கடி நிலையை மேலும் 7 மாதங்கள் நீட்டிக்க முடிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முட்டையின் மஞ்சள் கரு நல்லதா? கெட்டதா?
Next post விஷாலுக்கு நோ சொல்லி கார்த்திக்கு ஓகே சொன்ன ராகுல் பிரீத் சிங்…!!