ஜெயலலிதா சமாதியில் அழுகுரல் சத்தம்…!!

Read Time:1 Minute, 47 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-1கடந்த வாரம் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்ததையடுத்து அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் சமாதியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதையடுத்து, கடந்த 12 ஆம் திகதி திங்கட்கிழமை சென்னையையே புரட்டி போட்ட வர்தா புயலால் ஜெயலலிதா சமாதி எந்த சேதமும் ஏற்பட்டு விடாமல் இருப்பதற்காக அதிகாரிகள் படாத பாடுபட்டனர்.

ஆனால், அம்மாவின் சமாதியோ புயலால் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல், அதிகாரிகளுக்கு குடையாக இருந்ததாக அதாவது, இறந்த பின்னும் காவலர்களுக்கு தஞ்சம் கொடுத்ததாக சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

இதற்கிடையில், வாட்ஸ் ஆப் வலைதளத்தில் மற்றொரு செய்தி காட்டு தீ போல் பரவி வருகிறது.

அது என்னவென்றால், அம்மா சமாதியில் இரவு முழுவதும் அழுகுரல் சத்தமும்..வேதனையில் முணகல் சத்தமும் கேட்கிறது. கொஞ்சம் உற்றுக் கேட்டால் பகலிலும் அந்த அழுகுரல் கேட்கிறது என்கிற செய்தி தான் தற்போது வைரலாகியுள்ளது.

இதை சரியாக உற்று கவனித்த அதிகாரிகள், அது அழுகுரல் இல்லை, அருகில் கடற்கரை இருப்பதால், அலையில் எழும் அந்த காற்றின் சத்தம் அப்படி ஒரு பிரமையை நமக்கு உண்டாக்குகிறது என்று தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மீண்டும் வருகிறது வர்தா! மழை நீடிக்கும்..!!
Next post தீப்பற்றி எரியும் கட்டிடத்திலிருந்து குழந்தையை காப்பாற்றும் ரியல் ஹீரோ…!!