29 பேர் படுகொலை சம்பவம்: பிரேசில் போலீஸ்காரருக்கு 543 ஆண்டு சிறை தண்டனை

Read Time:1 Minute, 29 Second

Brasil.Flag.jpgபிரேசில் நாட்டில் 29 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய போலீஸ்காரர் கார்வல்ஹோவுக்கு 543 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. காவல்துறையில் அதிக அளவு ஊழல் தலைவிரித்தாடுவதைக் கண்டித்து கடந்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களை நோக்கி போலீஸôர் துப்பாக்கிகளால் சுட்டனர். இதில் 29 பேர் உயிரிழந்தனர்.

இச்சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்ட போலீஸ்காரர் கார்வல்ஹோவுக்கு 543 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பிரேசில் நாட்டில் அதிகபட்ச சிறைவாசம் 30 ஆண்டுகள்தான் என சட்டப்படி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும் அதிகபட்ச தண்டனை என்பதைக் கூறும் வகையில் அவருக்கு இத்தகைய நீண்டகால தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த படுகொலை சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட மேலும் நான்கு போலீஸ்காரர்கள் மீதும் கிரிமினல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இனிமேல் மொத்த கிரகங்கள் 8 தான் `கிரகம்’ என்ற அந்தஸ்தை புளூட்டோ இழந்தது
Next post ரூ.57 கோடி செலவில் ஐரோப்பாவிலேயே பெரிய கோவில்