ஏன் இரவில் தலைக்கு குளிக்க வேண்டும் என தெரியுமா?

Read Time:3 Minute, 10 Second

16-1481886130-cleanகூந்தல் பராமரிப்பு மிக முக்கியமானது. சரியாக பராமரிக்கும் கூந்தலில் பொடுகு, முடி உதிர்தல், போன்ற பாதிப்புகள் உண்டாகாது. அதில் முக்கியமானது தலைக்கு குளிப்பது. அதனைப் பற்றி இங்கு காண்போம்.

பொதுவாக நாம் காலையில்தான் தலைக்கு குளிப்போம். ஆனால் இரவில் குளிப்பதால் பல நன்மைகள் உண்டாகின்றன. காலையில் தலைக்கு குளிப்பது இரு மடங்கு வேலையாகும்.

தலைக்கு சரியாக எண்ணெய் மசாஜ் செய்ய முடியாது. துவட்ட நேரமின்றி ஓட வேண்டும். இதனால் தலைவலி, சைனஸ் போன்றவையும் தொற்றிக் கொள்ளும். ஆனால் இரவில் குளிப்பதால் அப்படியில்லை. பல நன்மைகள் உண்டாகின்றன. அவ்ற்றைப் பற்றி இங்கு காண்போம்.

நிதானமாக தலையை சுத்தம் செய்யலாம்: காலையில் குளிக்கும்போது தலைமுடியை சரியாக அலச முடியாது. ஆனால் இரவில் அழுக்கு போக நிதானமாக தலைமுடியை அலசலாம்.

இயற்கை சரும எண்ணெய் : இரவில் தலைக்கு குளிக்கும்போது தலையில் போதிய அளவு எண்ணெய் சுரக்க அவகாசம் கொடுக்கிறோம். இதனால் வறட்சியின்றி வெடிப்பின்றி கூந்தல் பாதுகாக்கப்படும்.

சூரிய ஒளி பாதிப்பு : தலைக்கு குளித்ததும் கூந்தல் மிகவும் பலவீனமாக இருக்கும். அந்த சமயங்களில் சூரிய ஒளிப்படும் போது கூந்தல் கற்றைகள் பாதிக்கப்படும்.

சிகை அலங்காரம் : காலையில் தலைக்கு குளித்த பின் செய்யப்படும் சிகை அலங்காரத்தால் கூந்தலின் வேர்க்கால்கள் பாதிக்கப்படும். இரவினில் அதனை அப்படியே விடுவதால் கூந்தல் பாதிக்கப்படுவதில்லை.

சைனஸ், தலைவலி இல்லை : இரவில் தலைக்கு குளிக்கும்போது நன்றாக துவட்டுவீர்கள். இதனால் நீர் தலையில் தங்கும் வாய்ப்பில்லை. இதனால் நீர் கோர்க்கும் பாதிப்பு உண்டாகாது.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மகளிர் பக்கம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெயர் சொல்லும் வேடங்களில் நடிக்க ஆசை: ராஜகுமாரன்…!!
Next post உடலுறவுக்கு பின் இரத்தப்போக்கு, கட்டிகள் ஏற்படுவதன் காரணங்கள் என்ன?