யாழில் இடம்பெற்ற கோர விபத்துக்கான காரணம் என்ன?

Read Time:2 Minute, 33 Second

unnamedயாழ்ப்பாணத்தில் இன்று மாலை இடம்பெற்ற கோர விபத்துக்கான காரணம் வெளியாகியுள்ளது.

யாழப்பாணம், சாவகச்சேரி, மீசாலை பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் பத்து பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிக வேகத்துடன் வாகனத்தை செலுத்தியமை மற்றும் நித்திரையே விபத்திற்கான காரணம் என பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அரச பேருந்தும், வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதினால் ஏற்பட்ட இந்த விபத்தில் 7 ஆண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் கிட்டத்தட்ட 21 பேர் காயமடைந்துள்ள நிலையில், மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த அனைவரும் வானில் பயணித்தவர்கள் என தெரியவந்துள்ளது. அவர்கள் ஹொரனை, மில்லனிய பிரதேசத்தில் இருந்து சுற்றுலா பயணத்திற்காக யாழ்ப்பாணம் நோக்கி சென்ற சந்தர்ப்பத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த அனர்த்தம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் இவ்விபத்தில் காயமுற்ற பஸ்ஸின் சாரதி வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இதேவேளை குறித்த விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதி கருத்து தெரிவிக்கையில் ‘நான் எனது திசையில் பஸ்ஸை செலுத்தினேன். அப்போது எதிர்த்திசையில்வந்துகொண்டிருந்த வான் எனது திசை நோக்கி வருவதை அவதானித்தேன்.’

இதையடுத்து, பஸ்ஸை உடனடியாக நிறுத்த முயற்சித்தேன். ஆனால், அதற்குள் வான் வந்து பஸ்ஸுடன்மோதியது’ என்று பஸ் சாரதி தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இயற்கை பழங்களில் கிடைக்கும் உயரிய சத்துக்கள்…!!
Next post விசித்திர நோயால் அவதி…8 மாத குழந்தையின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்! நெகிழ்ச்சி சம்பவம்…!!