ரூ.57 கோடி செலவில் ஐரோப்பாவிலேயே பெரிய கோவில்

Read Time:1 Minute, 48 Second

Koyil.jpgஐரோப்பாவிலேயே மிகப்பெரிய இந்துக்கோவில் இங்கிலாந்து நாட்டில் ரூ.57 கோடி செலவில் கட்டப்பட்டு உள்ளது இங்கிலாந்து நாட்டில் பர்மிங்காம் நகரில் டிவிடேல் என்ற இடத்தில் வெங்கடேசுவரர் கோவில் கட்டப்பட்டு உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவில் போலவே அதன்அடிப்படையில் இந்தக்கோவில் கட்டப்பட்டு உள்ளது. ரூ.57 கோடியே 30 லட்சம் செலவில் கட்டப்பட்ட இந்தக்கோவில் நேற்று முன்தினம் திறந்து வைக்கப்பட்டது.

இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட 15 அர்ச்சகர்கள் பூஜைகளை செய்கிறார்கள். கோவில் திறப்புவிழாவை யொட்டி ஒருவார காலத்துக்கு விழா நடக்கிறது. அதன்முடிவில் 11 அடி கிருஷ்ணர் சிலை ஸ்தாபிக்கப்படுகிறது.

1970-ம் ஆண்டு

இப்படி ஒரு கோவில்கட்டுவது என்ற திட்டம் 1970-ம் ஆண்டுகளில் உருவானது. ஆனால் இந்தக்கோவிலை கட்டுவதற்கான இடம் வாங்கப்படும் வரை அது வடிவம் பெறவில்லை. 1987-ம்ஆண்டு இடம் வாங்கப்பட்ட பிறகே அது செயல் உருவம் பெற்றது. கோவிலை கட்டுவதற்காக இந்தியாவில் இருந்து ஸ்தபதிகள், சிற்பிகள், கட்டுமானத்தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு அவர்கள் கோவில் கட்டுமானப்பணியில் ஈடுபட்டனர்.

இந்தக்கோவில் ஐரோப்பாவிலேயே மிகப்பெரியது ஆகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post 29 பேர் படுகொலை சம்பவம்: பிரேசில் போலீஸ்காரருக்கு 543 ஆண்டு சிறை தண்டனை
Next post பிரபாகரன் தங்கி இருக்கும் முல்லைத்தீவு பகுதியில் இலங்கை போர் விமானங்கள் குண்டு வீச்சு