நுரையீரல் தொற்றை தடுக்கும் சூப்பர் உணவுகள் எது எனத் தெரியுமா?

Read Time:3 Minute, 53 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-1விட்டமின், மினரல், புரோட்டின் என உடலின் அனைத்து பாகங்களுக்கும் ஊட்டம் தருவதுதான் சூப்பர் உணவாகும். எல்லா வித சத்துக்களும் அடங்கியவைகளாக இருக்க வேண்டும். விட்டமின், மினரல், அமினோ அமிலங்கள், ஃபைடோ சத்துக்கள், ஆன்டி ஆக்ஸிடென்டுகள் என எல்லாம் இருக்க வேண்டும்.

பருவகால உணவுகள்:

அந்தந்த பருவத்தில் விளையும் உணவுப் பொருட்கள் மிக அற்புதத்தை உங்கள் உடலுக்கு தருகிறது.

ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் போக்குவரத்து, குளிர்சாதனப் பெட்டி மற்றும் ரசாயன பதப்படுத்தும் பொருட்கள் (chemical preservatives) ஆகியவற்றால் எல்லா உணவுப் பொருட்களும் எல்லா பருவத்திலும் கிடைக்கின்றன.

குளிர் மற்றும் மழைகாலத்தில் நுரையீரலில் கிருமிகளின் தாக்கம் அதிகம் இருக்கும். எனவே இதற்கேற்ற உணவு எது என தெரிந்து கொள்ளுங்கள்.

இஞ்சி, பூண்டு மற்றும் முள்ளங்கி:

இவை இந்த பருவத்தில் அதிக விளையும். இவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்வதால் நுரையீரல் பலப்படும். குளிர்கால நுரையீரல் தொற்று உண்டாகாது.

கேரட், கொத்துமல்லி மற்றும் இஞ்சி ஜூஸ்:

இந்த பொருள்களை சாறு எடுத்து குடியுங்கள். கேரட் மற்றும் கொத்துமல்லியை சம அளவு எடுத்து சிறிய இஞ்சித் துண்டை போட்டு ஜூஸ் தயாரிக்க வேண்டும். இது சக்தியையும் உடல் அசதியையும் போகுகிறது.

மாதுளை:

இந்த பருவத்தில் அதிகம் கிடைக்கக் கூடிய பழம். இதனை சாப்பிடுவதால் பல மருத்துவ ஆரோக்கிய நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும்.

பட்டாணி:

பட்டாணியில் வெறும் புரதம் மட்டும் இருக்கிறது என நினைத்துவிடாதீர்கள்.

விட்டமின் கே, சி, ஏ, இரும்பு, கால்சியம், காப்பர், பொட்டாசியம் என பலவிதமான சத்துக்கள் உள்ளது. இது குளிர்காலத்தில் நுரையீரலில் உண்டாகும் அலர்ஜியை தடுக்கிறது.

பசலைக் கீரை:

இதில் பலவித அற்புதமான சத்துக்கள் இருக்கிறது. 30 வகையான ஃப்ளேவினாய்டு கொண்டுள்ளது. புற்று நோயை தடுக்கிறது. தினமும் சேர்த்துக் கொண்டால் ஜலதொஷம் காய்ச்சல் உங்களை நெருங்காது.

கொய்யா:

கிவி ஒரு சூப்பர் உணவு என்று அமெரிக்காவில் எல்லாரும் கொண்டாடி அதனை சாப்பிடுவார்கள். ஆனால் கிவி எல்லா நாட்டிலும் கிடைப்பதில்லை.

அதற்கு ஈடான ஒரு பழம்தான் கொய்யா. கிவியில் எத்தனை சத்துக்களோ அததனையும் கொய்யாவிலும் இருக்கிறது. இதனையும் உங்கள் சூப்பர் உணவில் சேர்த்திடுங்கள்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… https://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கட்டுப்பாடு என்ற பெயரில் பெண்களை அடக்கி வைக்க கூடாது: டாப்சி…!!
Next post பெண்களை ஆத்திரமடைய வைக்கும் ஆண்களின் 15 செயல்கள்…!!