பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்…!!
உப்பு இல்லாத பண்டம் குப்பையில்” என்று சொல்வார்கள், இந்த பழமொழிக்கேற்ப எவ்வளவு ருசியான சாப்பாடாக இருந்தாலும், அதில் உப்பு இல்லை என்றால் அந்த உணவை நம்மால் சாப்பிடவே முடியாது.
ஆனால் அதே வகையில் நாம் சாப்பிடும் உணவில் உப்பு அதிகமாக இருந்தாலும் அதை சாப்பிடவே முடியாது. எனவே எந்த உணவாக இருந்தாலும் அதை அளவாக பயன்படுத்துவதே மிகவும் சிறந்தது.
உப்பானது நாம் சாப்பிடும் உணவின் ருசியை அதிகரிப்பதில் உப்பு முக்கிய பங்கினை வகிப்பதால், சிலர் அந்த உப்பை பழங்களில் கூட தூவி சாப்பிடுவார்கள்.
பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
நாம் பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவதால், அந்த பழங்களின் சுவை இரண்டு மடங்காக அதிகரிக்கிறது.
பழங்களில் இருக்கும் எண்ணற்ற நுண்கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுத்து, பழங்கள் பிரஷ்ஷாக இருக்க உப்பு பயன்படுகிறது.
உப்பு சிறந்த கிளின்சர் போன்று செயல்படுகிறது. எனவே பிரஷ்ஷாக இருக்கும் பழங்களை உப்பு கலந்த நீரில் ஊற வைத்தால், அதில் உள்ள பூச்சிக் கொல்லிகள் மற்றும் இதர கெமிக்கல்கள் நீக்கப்படுகிறது.
அமிலங்கள் அதிகமாக நிறைந்த சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை போன்றவை வயிற்றில் அதிக அளவில் அசிடிட்டியை ஏற்படுத்துகிறது. எனவே இந்த பழங்களில் உப்பை தூவி சாப்பிட்டால், அது வயிற்றில் சுரக்கும் அமிலத்தை சமநிலைப்படுத்தி, செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனையைத் தடுக்கிறது.
புளிப்புச் சுவையுள்ள பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவதால், அந்த பழங்களின் புளிப்பு குறைந்து மிகவும் சுவையாக இருக்கும். மேலும் சில கனியாத பழங்களை சாப்பிடும் போது, அதில் உள்ள பச்சை வாசனை வராமல் இருப்பதற்கு உப்பை தூவி சாப்பிடலாம்.
இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… https://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
Average Rating