செங்கல் தொழிற்சாலைக்கு விற்கப்பட்ட 33 குழந்தைகள் மீட்பு…!!

Read Time:1 Minute, 31 Second

201612230648531205_33-children-sold-to-brick-factories-rescued-from-traffickers_secvpfசத்தீஷ்கர் மாநிலம் பாஸ்டர் மாவட்டத்தில் செங்கல் தொழிற்சாலைக்கு விற்கப்பட்ட 33 குழந்தைகள் உள்பட 70 பேர் கடத்தல் காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டனர்.

பாஸ்டர் மாவட்டத்தில் போக்குவரத்து சோதனையில் ஈடுபட்ட போது இவர்கள் சிக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து கடத்தல் ஒழிப்பு அதிகாரி விஜய் சங்கர் ஷர்மா கூறுகையில், “20 சிறுவர்கள் மற்றும் 13 சிறுமிகள் ஆகியோரை நாங்கள் மீட்டுள்ளோம். மீதமுள்ளவர்கள் பெரியவர்கள். ஒவ்வொருவரும் பல ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டனர். ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர்களிடம் இவர்கள் விற்கப்பட்டனர்” என்றார்.

மீட்கப்பட்ட குழந்தைகள் மறுவாழ்வு மையத்தில் தற்போது உள்ளனர். பின்னர் இவர்கள் அவர்கள் அங்கிருந்து தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

கடந்த 2014-ம் ஆண்டு முதல் கடத்தல் தொடர்பாக 5,466 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய அதிகாரிகள் தரப்பில் தெரிவிகப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இரண்டு மகன்களை கொன்றுவிட்டு தற்கொலை செய்த தந்தை: மனதை உருக்கும் சம்பவம்…!!
Next post மீண்டும் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் கார்த்தி…!!