By 23 December 2016 0 Comments

அதையும் தாண்டி, பெண்கள் உங்களிடம் எதிர்பார்க்கும் விஷயங்கள்…!!

man_and_lady_001-w245ஆண்கள் எப்போதும் ரொமான்ஸ் மூடில் இருந்தால் தான் பெண்களுக்குப் பிடிக்கும் என்ற மூட நம்பிக்கை, இன்றைய இளம் தலைமுறையினரிடையே சில காலமாக இருந்து வருகிறது. இதை யார் சொன்னார்கள், ஏன் இதை நம்மவர்கள் பின்பற்றி வருகின்றனர் என்றே தெரியவில்லை.

பெண்களைப் பொருத்த வரை ஆண்கள் ரொமான்டிக்காக இருப்பதையும் தான்டி சிலவற்றை எதிர்பார்க்கின்றனர். இவை பெண்களிடம் சுவாரஸ்யங்களாகக் கருதப்படுகின்றன. ஆனால் உங்களுக்கு எப்படி என்பதைப் படித்த நீங்களாகவே தெரிந்து கொள்ளுங்கள்..

தாங்கள் பேசுவதை ஆண்கள் காது கொடுத்து கேட்க வேண்டும். பேச, பேச, குறுக்கே பேசுவது, முழுதாய் புரிந்து கொள்ளாமல் காச்சுமூச்செனக் கத்தக் கூடாது எனப் பெண்கள் எதிர்பார்க்கிறார்கள். அவனும் சுதந்திரமாக இருக்க வேண்டும், எங்களையும் சுதந்திரமாக இருக்க அனுமதிக்க வேண்டும். வேலை, சுய விருப்பங்கள் போன்றவற்றில் தலையீடுகள் இருக்கக் கூடாது என எதிர்பார்க்கிறார்கள்.

கண்டதை பேசி நேரத்தை வீணடிக்காமல், மூட நம்பிக்கைகள் இன்றி, நடைமுறைக்கு ஏற்றார் போல வாழும் நபர்களை எதிர்பார்க்கிறார்கள் தற்போதைய பெண்கள். எந்தச் செயலாக இருந்தாலும், மற்றவர் உதவியை எதிர்பாராமல் தனிச்சையாகச் செயல்படக் கூடிய ஆண்களை மிகவும் பிடிக்குமெனப் பெண்கள் கூறுகிறார்கள்.

எதற்கெடுத்தாலும், எதிர்மறையாகப் பேசவது, ஏதாவது செய்யும் போது “இது சரியாக வருமா???” எனக் கேள்விகள் கேட்பது என இல்லாமல், நேர்மறை எண்ணங்களுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் பெண்கள்.

என்ன சூழ்நிலையாக இருந்தாலும் தங்களோடு, தங்களுக்கு உறுதுணையாக இருப்பவர்களே எங்களுக்கு வாழ்க்கை துணையாக இருக்க வேண்டும் என விருப்பப்படுகிறார்கள் பெண்கள். இந்தக் குணாதிசயம் மிகவும் முக்கியமானது என்றும் கூறுகிறார்கள். ஏதேனும் தவறு செய்தாலும் அதைக் குத்திக் காண்பிக்காது, அன்பாக எடுத்துரைக்கும் ஆண்கள் தான் சிறந்தவர்களாம். இவர்கள் தான் இதயப் பூர்வமாகப் பழகுவார்கள் என நம்புகிறார்கள் பெண்கள்.

*** இதுபோன்ற “அவ்வப்போது கிளாமர்” செய்திகளை பார்வையிட இங்கே அழுத்தவும்…
http://www.nitharsanam.net/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D



Post a Comment

Protected by WP Anti Spam