2016-ம் ஆண்டு நான் முழு நீள நடிகனான முதல் வருடம்: ஆர்.ஜே.பாலாஜி நெகிழ்ச்சி…!!

Read Time:1 Minute, 27 Second

201612241745275358_thank-you-2016-says-rj-balaji_secvpfநகைச்சுவை நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி முக்கிய இடம் பிடித்து வருகிறார். இது பற்றி அவர் கூறுகையில் “சென்ற வருடம் வெளியான ‘நானும் ரவுடிதான்’ படத்திற்கு நீங்கள் கொடுத்த அன்பும் ஆதரவும், அது கொடுத்த தைரியமும் தான்,சரி இனி தொடர்ந்து நடிக்கலாம் என்று முடிவெடுக்க காரணமாக அமைந்தது.அதன் பலனாக இந்த வருடம் ஆறு படங்கள்.

நான் திரையில் வியந்து பார்த்த இந்திய சினிமாவின் ஜாம்பவான்கள் மணிரத்னம், ஏ.ஆர்.முருகதாஸ்,சந்தோஷ் சிவன், ரவிவர்மன்,பிரபுதேவா, மகேஷ் பாபு போன்ற பல நட்சத்திரங்களுடன் பணியாற்றுவதும் பயணிப்பதும் என, கனவுகள் அரங்கேறி, என்னை மென்மேலும் வளர்த்துக்கொள்ள உதவிய மறக்க முடியாத வருடம்.

இதற்கு காரணமான அனைவருக்கும் நன்றி. இந்த கனவு இன்னும் பல அதிசயங்களுடன் நீள வேண்டும். கால வெள்ளத்தை கடந்து ஓட வேண்டும். அதனை உங்களுடைய அன்பும், வாழ்த்துக்களும் சாத்தியமாக்கும். புத்தாண்டு வாழ்த்துக்கள்” என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிஸ்தா சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்…!!
Next post எலும்புகளை பலமாக்கும் உணவுகள்..!!