குழந்தையை இழந்தார் பிரித்தானியா ராணியின் பேத்தி: அதிர்ச்சி செய்தி…!!
பிரித்தானியா ராணியின் பேத்தி Zara மற்றும் அவரது கணவர் Mike Tindall தங்கள் குழந்தையை இழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்செய்தியை அவர்களின் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ளார்.
கடந்த நவம்பர் 30ம் திகதி Zara தனது இரண்டாவது குழந்தையுடன் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். குழந்தை 2017ம் ஆண்டில் பிறக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் மிகவும் கவலைக்குரிய வகையில் Zara மற்றும் அவரது கணவர் Mike Tindall தங்கள் குழந்தையை கர்ப்பத்திலேயே இழந்துள்ளனர்.
எத்தகையை சூழ்நிலையில் குழந்தை இழந்தார்கள் என்பதை பற்றிய விவரத்தைக் கூற செய்தி தொடர்பாளர் மறுத்துள்ளார். எனினும், ஜராவுக்கு எந்த மருத்துவ ஆபத்தும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
தனி நபர்களின் விஷயம் பற்றி கருத்துத் தெரிவிக்க பக்கிங்ஹாம் அரண்மனை மறுத்துள்ளது.
பிரத்தானியா ராணியின் பேத்தி ஜரா கடந்த 2011ம் ஆண்டு இங்கிலாந்து முன்னாள் ரக்பி விளையாட்டு வீரரான Mike Tindallலை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 வயதில் மியா என்ற மகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Average Rating