By 25 December 2016 0 Comments

சாவித்திரியாக சமந்தா நடிக்கவில்லை: படக்குழு விளக்கம்…!!

201612241642545721_samantha-will-not-play-savitri-in-the-upcoming-biopic_secvpfமறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு தெலுங்கில் படம் ஆகிறது. இந்த படத்துக்கு ‘மகாநதி’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.இந்த படத்தில் சமந்தா நடிக்கிறார் என்ற செய்தி வெளியானதுமே, அவர் சாவித்திரி வேடத்தில் நடிக்கிறார் என்று தகவல் பரவியது. இணையதளங்களில் இது பரபரப்பான செய்தியானது.

இந்த நிலையில் தெலுங்கு ‘மகாநதி’ படத்தில் சமந்தா சாவித்திரி வேடத்தில் நடிக்கவில்லை என்று அந்த படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர். இதுகுறித்து படக்குழு கூறுகையில் “இந்த படத்தில் சமந்தா நடிப்பது உண்மை தான். அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவர் சாவித்திரி வேடத்தில் நடிக்கவில்லை. வேறு ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவர் பார்வை வழியாக சாவித்திரியின் வாழ்க்கை சொல்லப்படும்.

சாவித்திரி வேடத்தில் நடிக்கும் நடிகை இன்னும் தேர்வு செய்யப்படவில்லை என்று அவர்கள் தெரிவித்து உள்ளனர். அது யார் என்றது உறுதி செய்யப்பட்டவுடன் முறைப்படி அறிவிக்கப்படும்” என்று தெரிவித்து இருக்கிறார்கள்.

சாவித்திரி வேடத்தில் நடிக்க நடிகைகள் நித்யாமேனன், வித்யா பாலன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.



Post a Comment

Protected by WP Anti Spam